Mar 21

ஜனாதிபதி ரஷ்யாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை 22 ஆம் திகதி புதன்கிழமை ரஷ்யாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்கிறார்.

 

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு விடுத்த உத்தியோகபூர்வ அழைப்பை ஏற்றே ரஷ்யாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை ஜனாதிபதி மேற்கொள்கிறார்.

 


மூன்று நாட்கள் ரஷ்யாவில் தங்கியிருக்கும் ஜனாதிபதி அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உட்பட அரச உயர்மட்டத் தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.

 

அத்தோடு ரஷ்யாவில் வாழும் இலங்கை சமூகத்தினரையும் வர்த்தக சமூகத்தினரையும் சந்தித்து உரையாடல்களை நடத்தவுள்ளார்.

 

இலங்கையில் முதலீடுகளை செய்வதற்கான அழைப்பையும் விடுக்கவுள்ளனர்.

 

இரு நாடுகளுக்கிடையே கலை. கலாசாரங்களை வளர்ப்பது, உல்லாசப் பிரயாணத்துறையை ஊக்குவிப்பது தொடர்பிலான உடன்படிக்கைகளும் செய்து கொள்ளப்படவுள்ளன.

 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் அமைச்சர்களான மஹிந்த சமரசிங்க, ஜோன் அமரதுங்க, எஸ்.பி.நாவின்ன ஆகியோரும் செல்கின்றனர்.