Jun 27

எரிகாயங்களுக்கு உள்ளான தீயணைப்பு படை வீரர்

ரெக்ஸ்டேல் பகுதியில் ஏற்பட்ட தீப்பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்ட ரொரன்ரோ தீயணைப்பு படை வீரர் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இஸ்லிங்டன் அவனியூ மற்றும நெடுஞ்சாலை 401 பகுதியில், அலென்பி அவனியூவில் அமைந்துள்ள வீடு ஒன்றில் சனிக்கிழமை இரவு 8.15 அளவில் தீ பரவ ஆரம்பித்ததாக கூறப்படுகிறது.

தகவல் அறிந்து தாம் சம்பவ இடத்தினைச் சென்றடைந்த வேளையில், குறித்த அந்த வீட்டினுள் கடுமையாக தீ எரிந்தவாறும், கரும்புகை வெளியேறியவாறும் காணப்பட்டதாக ரொரன்ரோ தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

ஒன்பது தீயணைப்பு வாகனங்களும், சுமார் 35 தீயணைப்பு படையினரும் இந்த தீப்பரவலை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்த வேளையில், அவர்களில் ஒருவர் எரிகாயங்களுக்கு உள்ளனதாக கூறப்படுகிறது.

காயமடைந்த தீயணைப்பு படை வீரர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அவருக்கு ஏற்பட்டுள்ள காயங்கள் பாரதூரமானவை அல்ல என்றும் ரொரன்ரோ அவசர மருத்துவப் பிரிவினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

குறித்த அந்த வீட்டில் தீப்பரவல் ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.