Mar 21

வட கொரிய ஜனாதிபதி மிக மோசமான முறையில் செயற்படுகிறார்; டொனால்ட் ட்ரம்ப்

வட கொரிய ஜனாதிபதி கிம் யொங் உன் மிக மிக மோசமான  முறையில்  செயற்படுவதாக  அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

புளோரிடா மாநிலத்திலிருந்து வாஷிங்டன் நகருக்கு விமானப் படை விமானத்தில் திரும்பிக் கொண்டிருந்த வேளை தன்னுடன் பயணித்த ஊடகவியலாளரள்களுக்கு  கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

வட கொரியாவானது புதிய ஏவுகணை இயந்திரமொன்றை கடந்த சனிக்கிழமை வெற்றிகரமாக பரிசோதித்தையொட்டியே டொனால்ட் ட்ரம்பின் இந்த விமர்சனம் வெளியாகியுள்ளது.

அமெரிக்க  இராஜாங்க செயலாளர்  ரெக்ஸ் தில்லர்ஸன்   சீனாவுக்கு   வட கொரிய பிரச்சினைகள் குறித்து ஆராய  விஜயத்தை மேற்கொண்டுள்ள நிலையில்  இடம்பெற்ற  இந்தப் பரிசோதனையை  தவறான நடத்தையொன்றாக  டொனால்ட் டரம்ப் குறிப்பிட்டுள்ளார்.