Mar 21

கானாவில் மரம் சரிந்து விழுந்து அனர்த்தம்

கானாவில்  கின்தம்போவிலுள்ள  பிரபல நீர்வீழ்ச்சி ஸ்தலத்தில்  பாரிய மரமொன்று சரிந்து விழுந்ததில் 20  க்கு மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதுடன்  பலர் காயமடைந்துள்ளனர்.

புயல் வீசிய வேளையில் அந்த நீர்வீழ்ச்சியோரமாக  நீச்சலடித்துக் கொண்டிருந்தவர்களே  இந்த அனர்த்தத்தில் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் அந்த மரத்தின் கீழ் சிக்கியிருந்தவர்களை மீட்கும்  பணியில் பொலிஸாரும் தீயணைப்புப் படைவீரர்களும் கூட்டிணைந்து ஈடுபட்டனர்.

பலியானவர்களில் அநேகர் வென்சி சிரேஷ்ட உயர் பாடசாலையின் மாணவர்களாவர். ஏனையவர்கள் சுற்றுலா பயணிகளாவர்.

இந்த சம்பவத்தில் குறிப்பிட்ட பாடசாலையின் நிர்வாகிகளில் ஒருவர் உட்பட 11  பேர்  காயமடைந்துள்ளனர்.