Jun 26

ஒன்ராறியாவில் அடுத்த ஆண்டிலிருந்து வாடகை 1.8 சதவீதத்தினால் அதிகரிப்பு

ஆண்டு தோறும் வாடகை தொகையினை அதிகரிப்பதற்கான எல்லை வரம்பினை ஒன்ராறியோ அரசு வகுத்துவரும் நிலையில், அடுத்த ஆண்டிலிருந்து வாடகைத் தொகையினை 1.8 சதவீதத்தினால் அதிகரிப்பதற்கான உரிமை வழங்கப்பட்டுள்ளது.

காணி கட்டட உரிமையாளர்களின் வாடகை கட்டுப்பாட்டு விதிகளை விரிவாக்குவது தொடர்பில் ஒன்ராறியோவின் லிபரல் அரசாங்கம் கொண்டுவந்துள்ள புதிய திட்டத்தின் அடிப்படையில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை வாடகை அதிகரிப்பினை மேற்கொள்வது குறித்த கட்டுப்பாடுகளும், இதுவரை 1991ஆம் ஆண்டுக்கு முன்னர் கட்டப்பட்ட தனியார் கட்டடங்களின் உரிமையாளர்களுக்கு மட்டுமே விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அது நீக்கப்பட்டுள்ளது.

இதனால் மேலும் சுமார் 2,50,000 வரையிலானோர், முறையற்ற வாடகை அதிகரிப்பில் இருந்து பாதுகாப்பினை பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.