Mar 21

பாகிஸ்தானில் முதல் தடவையாக இந்து திருமண சட்டம் அமுல்

பாகிஸ்தானில் முதல் தடவையாக இந்து திருமண சட்டமூலமொன்று சட்டமாக  நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 

அந்நாட்டில் சிறுபான்மையினராகவுள்ள இந்துக்களின் திருமணங்களை ஒழுங்கு முறைப்படுத்தவதற்கு உதவும் மேற்படி சட்டமூலத்தில் அந்நாட்டு ஜனாதிபதி மம்னூன்   ஹுஸைன் கைச்சாத்திட்டதையடுத்தே  அது சட்டமாக  மாற்றப்பட்டுள்ளது.

பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் ஆலோசனையின்  பிரகாரமே  ஜனாதிபதி இந்த இந்து திருமண சட்டமூலம் - 2017 இல் கைச்சாத்திட்டுள்ளார்.

மேற்படி சட்டமூலமாகது  இந்துக்களின் திருமணங்கள் , குடும்பங்கள்   மற்றும் அவர்களது பிள்ளைகளை பாதுகாப்பதை இலக்காகக் கொண்டுள்ளது. 

மேற்படி சட்டம்   கடந்த 10  ஆம் திகதி  பாகிஸ்தானிய பாராளுமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.