Jan 16

சபரிமலையில் மீண்டும் பதற்றம் : 2 பெண்கள் தடுத்து நிறுத்தம்

சபரிமலை அய்யப்பன் கோயிலில் வழிபாடு நடத்த இன்று (ஜன.,16) மேலும் 2 பெண்கள் சென்றதால் அங்கு மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

சபரிமலை அய்யப்பன் கோயிலில் வழிபாடு நடத்துவதற்காக கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த ரேஷ்மா, ஷானிலா என்ற 2 இளம்பெண்கள் சென்றுள்ளனர். அவர்களை பக்தர்கள் நீலிமலை பகுதியில் தடுத்து நிறுத்தி, போராட்டம் நடத்தினர். போலீசார் பாதுகாப்புடன் சென்றும் அவர்களை தொடர்ந்து முன்னேற விடாமல் அய்யப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தினர்.

இதனால் அவர்கள் பம்பைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். பல பிரச்னைகளுக்கு பிறகும் மீண்டும் 2 பெண்கள் சாமி தரிசனம் செய்ய சென்றதால், சபரிமலையில் மீண்டும் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.