Jun 26

கனடாவின் 150 வது பிறந்த தினம் : கனேடியத்தமிழர்களின் ‘பரதமைல் 150’ வெகுசிறப்பாக நடைபெற்றது

கனடாவின் 150 வது பிறந்த தினத்தையொட்டி Toronto வின் 40 நடனஆசிரியர்களின் 1175 மாணவர்கள் பங்கேற்ற பரதமைல்-150 வெகுசிறப்பாக சனிக்கிழமை நடைபெற்றது. அத்துடன் 150 கனேடிய தமிழ் பாடக, பாடகிகளால் கனேடிய தேசிய கீதம் ஆங்கிலத்திலும், தமிழிலும் இசைக்க நிகழ்ச்சி ஆரம்பமாகியது.

இந் நிகழ்ச்சியின் வெற்றி கனேடிய தமிழ் கலைஞர்களின் ஒன்றிணைந்த செயற்பாட்டுக்கு கிடைத்ததென கலந்து கொண்ட பல கலைஞர்கள் கருதுகின்றனர். அத்துடன் Scarborough Hospital க்கான நிதிசேகரிப்பும் இந்நிகழ்வூடாக சேகரிக்கப்பட்டு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வை திறம்பட ஒருங்கிணைத்து செயற்பட்ட நிகழ்ச்சி ஏற்பாட்டுக்குழுவுக்கும் பங்குகொண்ட கலைஞர்களுக்கும்  நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக்கொள்ளுகின்றது.