Mar 21

ஜனாதிபதி பிரதமரை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு

முன்னாள் .தே.. செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிராக சட்ட மா அதிபரினால் க்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் சாட்சியமளிக்க ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை எதிர்வரும் ஜூலை மாதம் 17 ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

2015இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது அபேட்சகர்களில் ஒருவராக இருந்த ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன,  பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையே  ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டுள்ளதாக கூறி போலி ஆவணம் ஒன்றினை தயாரித்து அதனை பகிரங்கப்படுத்திய விவகாரம் தொடர்பில் முன்னாள் .தே.. செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிராக சட்ட மா அதிபரினால் க்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணை இன்று திங்கட்கிழமை எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போதே கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விகும் களுவாராச்சி இந்த அறிவித்தலை விடுத்தார்.

இதனையடுத்து போலி ஆவணம் தயாரித்ததாக குற்றம்சாட்டப்பட்டு, ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் ஜூலை 17ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டதோடு 17ஆம் திகதி முதல் ஜூலை 28 ஆம் திகதிவரை இது தொடர்பிலான வழக்கை தொடர்ச்சியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவும் நீதிமன்றம் தீர்மானித்தது.