Jan 13

அமெரிக்காவில் பனிப்புயல் – 5 உயிரிழப்பு 48 பேர் காயம்!

அமெரிக்காவை அச்சுறுத்தி வரும் பனிப்புயல் காரணமாக ஏற்பட்ட விபத்துக்களில் இதுவரை ஐவர் உயிரிழந்துள்ளதுடன், 48 பேர் காயமடைந்துள்ளனர்.


அமெரிக்க ராகிஸ் மற்றும் சமவெளிகளை 1,609 கி.மீ வேகத்தில் பனிப்புயல் தாக்கி வருகின்றது.

குறிப்பாக மிசோரி, கன்சாஸ் மற்றும் மத்திய அமெரிக்காவிலுள்ள பல மாநிலங்களும் இந்த பனிப்புயலினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

வீதிகளை சுமார் 6 முதல் 8 மீற்றர் வரை ஆக்கிரமித்துள்ள பனிக்கட்டிகள் காரணமாக போக்குவரத்து மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன், மிசோரி, கன்சாஸ் மற்றும் மத்திய அமெரிக்கா உள்ளிட்ட சில பகுதிகளில் மின் தடை ஏற்பட்டுள்ளதாகவும் இதன்காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பனிப்புயல் காரணமாக கடந்த சில தினங்களில் மாத்திரம் 700 இற்கும் மேற்பட்ட விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாகவும், இதன்போது ஐவர் உயிரிழந்துள்ளதுடன், 48 பேர் காயமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

கடந்த 100 ஆண்டுகளுக்கு பின்னர் அமெரிக்காவை தாக்கிய மிக மோசமாக பனிப்புயலாக இது கருதப்படுவதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.