Jan 12

தெற்கு சஸ்காச்சுவானில் எச்1என்1 வைரஸ் காய்ச்சலினால் ஆறு பேர் உயிரிழப்பு!

தெற்கு சஸ்காச்சுவானில் எச்1என்1 வைரஸ் காய்ச்சலினால், ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக சஸ்காச்சுவான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதில், நடப்பு ஆண்டில் இந்த கொடிய நோயினால், உயிரிழந்த மூன்று பேர் ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நோய்க்கான தடுப்பூசி உள்ளபோதும், அதனை போட்டுக்கொள்ள மக்கள் மிக தமாதப்படுத்துவதாக சஸ்காச்சுவான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

எச்1என்1 வைரஸ் காய்ச்சல் தாக்கம், அடுத்த நான்கு மாதங்களுக்கும் மேலாக நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.