Jan 12

பரிஸில் ஒன்பதாவது சுற்று “யெலோ வெஸ்ட்“ போராட்டத்திற்கு ஆயத்தம்!

பரிஸில் தொடர்ந்துவரும் “யெலோ வெஸ்ட்“ அமைப்பினரின் போராட்டங்கள் மேலும் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஒன்பதாவது சுற்று “யெலோ வெஸ்ட்“ எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு அதன் ஏற்பாட்டாளர்கள் தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில், ஆர்ப்பாட்டங்களின் போதான அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் இதுவரை 5000 ஆக இருந்த பாதுகாப்பு படைகளின் எண்ணிக்கை இன்று (சனிக்கிழமை) முதல் நாடளாவிய ரீதியாக 80 ஆயிரமாக அதிகரிக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, சேம்ஸ் எலிஸி அவனியுவில் உள்ள வர்த்தக நிலைய உாிமையாளர் தமது உடைமைகளை பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன்பொருட்டு கண்ணாடியிலான முகப்புகளை கனமான பலகை சட்டங்களை கொண்டு மறைத்து வருகிருகின்றனர்.