Jan 11

மகாவலி ஆற்றில் கலக்கப்பட்டுள்ள பாற்பொருள் உற்பத்திக் கழிவுகள்

கொட்டகல- திம்புள்ள - போகாவத்த பிரதேசத்தில் யோகட் மற்றும் சீஸ் தயாரிப்பின் போது எஞ்சிய கழிவுப்பொருட்களை மகாவலி ஆற்றிலில் கலக்கப்படுவதால் சுற்று சூழலுல் மற்றும் ஆற்று நீர் மாசடைவதாகவும் குறித்த பிரதேசம் முழுவதும் பாரிய துர்நாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் பொது மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.    

கொட்டகல பிரதேச சபையின் கட்டுப்பாட்டுக்கு கீழ்  இயங்கும் திம்புள்ள - போகாவத்த பிரசேத்தில்  அமைந்துள்ள ஒரு தனியார் நிறுவனம் ஒன்றில்  யோகட் மற்றும் சீஸ் உற்பத்தியின் போது வெளியேறும் கழிவுகளை மகாவலி ஆற்றில் கலக்கப்படுவதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

போகாவத்த பிரதேசத்தில் இயங்கிவரும்  தனியார் நிறுவனத்தில் யோகட் மற்றும் சீஸ் தயாரிப்பிற்கு தேவையான பாலை உள்ளூர் விவசாயிகளிடமிருந்தும் மற்றும் தனியார் பண்ணைகளிலிரும் பெற்று அதிகளவில் யோகட் மற்று சீஸ் பால் உற்பத்தி உணவுகளை உற்பத்தி செய்வதாக பிரதேச மக்கள்  தெரிவித்துள்ளனர்.  

போகாவத்த பிரதேசத்தில் இயங்கிவரும்  தனியார் நிறுவனத்தில் தயாரிக்கப்படும்  யோகட் மற்றும் சீஸ் பால் உற்பதியின் போது வெளியேறும் மேலதிக கழிவுப்பொருட்களை நாளாந்தம் குறித்த தனியார் நிறுவத்திலிருந்து மாகாவலி கங்கையை சென்றடையும் வகையில் நீரை  திசை திருப்பியிருப்பதால் மகாவலி கங்கையில்சென்று குறித்த அசுத்த நீர் கலக்கப்படுவதால் சூழல் மாசடைந்துள்ளதாக பிரசேதச மக்கள் தெரிவித்துள்ளனர். 

போகாவத்த பிரசேத்திலிருந்து கொத்மலை ஓயா நீர்த்தேக்கத்தின் வீதியின் இரு மருங்கிலும் வீடுகள் அமைந்துள்ள நிலையில் குறித்த கழிவு நீர்கால்வாயின் ஊடாக பாய்ந்து செல்வதால் அதிக துர்நாற்றத்தை ஏற்படுத்துவதோடு சுற்று சூழல் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பிரதேச வாசிகளுக்கு குறித்த நீரை பயன்படுத்த முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.