Jan 11

மைத்திரியின் தர்மசங்கட நிலை ஒரு ஆய்வுண் கண்ணோட்டம்

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பல அமைச்­சுக்­களை தன்­வசம் வைத்­தி­ருக்­கின்­ற­போ­திலும், அவை தொடர்­பான எந்­த­வொரு சட்­ட­மூ­லத்தையும் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­க­மு­டி­யா­த­வ­ராக இருக்­கிறார் என்று புதிய ஒரு பிரச்­சினை கிளப்­பப்­பட்­டி­ருக்­கி­றது. சபைக்குள் அவ­ரது கட்­சியைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­து­கின்ற ஒரு அமைச்­சரும் இல்­லா­ததே இதற்கு காரணம் என்றும் கூறப்­ப­டு­கி­றது.இதை முதலில் ஊட­கங்கள் வாயி­லாகக் கிளப்­பி­யவர் முன்னாள் அமைச்­ச­ரான விஜே­தாச ராஜ­பக் ஷ. அவர் ஐக்­கிய தேசிய கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக இருக்­கின்ற போதிலும் ஜனா­தி­ப­தி­யு­டனும் அவ­ரது தற்­போ­தைய நேச சக்­தி­க­ளான முன்னாள் ஜனா­தி­பதி மகிந்த ராஜ­பக் ஷ முகா­மு­டனும் நெருக்­கத்தைப் பேணு­கிறார்.அதை அடிப்­ப­டை­யாகக் கொண்டு நோக்­கும்­போது  ஜனா­தி­பதி பாரா­ளுமன்­றத்தில் தனது அமைச்­சு­க­ளுடன் தொடர்­பு­டைய சட்­ட­மூ­லங்­களை சமர்ப்­பிப்­பதில் உள்ள பிரச்­சி­னையை அவரின் வேண்­டு­தலின் பேரி­லேயே ராஜ­பக்ச கிளப்­பி­னாரோ என்று சந்­தே­கிக்­கவும் வேண்­டி­யி­ருக்­கி­றது.
ஜனா­தி­பதி சிறி­சே­னவும் ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் அமைச்­சர்­களும் முரண்­நி­லையில் இருப்­பதால் தனது அமைச்­சு­க­ளுக்­கு­ரிய சட்­ட­மூ­லங்­களை சபையில் சமர்ப்­பிக்­கக்­கூ­டிய பதி­லாட்­க­ளாக அவர்­களை அவரால் நம்­ப­மு­டி­யாது என்­பது ஒரு­வி­தத்தில் உண்­மையே.

ஜனா­தி­பதி எதிர்­நோக்­கு­கின்ற இந்தப் பிரச்­சினை அவ­ருக்கு முன்னர் நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­ப­தி­யாக அதி­கா­ரத்தில் இருந்­த­வர்­களில் எவ­ருமே சந்­திக்­காத ஒன்­றாகும். நான்கு தசாப்­தங்­க­ளாக நடை­மு­றையில் இருந்­து­வ­ரு­கின்ற தற்­போ­தைய அர­சி­ய­ல­மைப்பில் இருக்­கின்ற  இந்த குறை­பாடு இது­கா­ல­வரை தலை­காட்­டாமல் இருந்­து­வந்­தி­ருக்­கி­றது. பிர­த­ம­ராக திரு­மதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க இருந்­த­போது ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி தலை­மை­யி­லான அவரின் அர­சாங்­கத்­துடன் ஜனா­தி­பதி டி.பி.விஜே­துங்க முரண்­பட்­டி­ருப்­பா­ரே­யானால்,  பாது­காப்பு அமைச்சர் என்­;ற­வ­கையில் அவர் இத்­த­கைய பிரச்­சி­னையை எதிர்­நோக்­க­வேண்­டி­வந்­தி­ருக்கும்.1994 ஆகஸ்ட் தொடக்கம் நவம்பர் வரை பாது­காப்பு அமைச்சு விஜே­துங்க வசமே இருந்­தது.அது ஒரு குறு­கிய கால­கட்டம் என்­பதால் பாது­காப்­புடன் தொடர்­பு­டைய சட்­ட­மூலம் எதையும் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­க­வேண்­டிய தேவை எழ­வில்லை.

        ஐக்­கிய தேசிய கட்சி தலை­மை­யி­லான ஐக்­கிய தேசிய முன்­னணி பாரா­ளு­மன்­றத்தை அதன் கட்­டுப்­பாட்டில் வைத்­தி­ருந்­த­போது 2004 முற்­ப­கு­தியில்  ஜனா­தி­பதி திரு­மதி குமா­ர­துங்க பாது­காப்பு அமைச்சை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் அன்­றைய அர­சாங்­கத்­திடம் இருந்து பறித்­தெ­டுத்தார்.ஆனால், விரை­வா­கவே அவர் அந்த அர­சாங்­கத்தைப் பத­வி­நீக்கி,  பாரா­ளு­மன்­றத்தைக் கலைத்து புதிய பொதுத் தேர்­தலை நடத்­தி­ய­தனால் பாது­காப்­புடன் தொடர்­பு­டைய சட்­ட­மூலம் எதையும் சமர்ப்­பிப்­பதில் தனக்கு பிரச்­சினை வராமல் தவிர்த்­துக்­கொண்டார். 2004 ஏப்ரல் முதல் வாரத்தில் நடை­பெற்ற தேர்­தலில் திரு­மதி குமா­ர­துங்­கவின் கூட்­ட­ணியே வெற்றி பெற்று அர­சாங்­கத்தை அமைத்­தது. ஜனா­தி­பதி ராஜ­பக் ­ஷவைப் பொறுத்­த­வரை பாரா­ளு­மன்­றத்தை தனது ஆட்­சிக்­காலம் முழு­வதும் அவர் கட்­டுப்­பாட்டில் வைத்­தி­ருந்­த­தனால் இத்­த­கைய பிரச்­சினை எதுவும் அவ­ருக்கு வர­வில்லை.

     ஆனால், ஜனா­தி­பதி சிறி­சே­னவின் நிலைமை பரி­தா­ப­மா­ன­தாக இருக்­கி­றது. உல­கி­லேயே பாரா­ளு­மன்­றத்தில் ஒரு சட்­ட­மூ­லத்தைச் சமர்ப்­பிக்­க­மு­டி­யாத ஒரே­யொரு அர­சாங்கத் தலை­வரும் அமைச்­ச­ரவைத் தலை­வரும் அவ­ரா­கத்தான் இருக்­க­வேண்டும். பாரா­ளு­மன்­றத்தை அவர்  இப்­போது கலைப்­பதை அர­சி­ய­ல­மைப்­புக்­கான 19 வது திருத்தம் தடுக்­கி­றது. இத்­த­கைய­தொரு பின்­பு­லத்தில் ஜனா­தி­பதி சிறி­சே­ன­வினால் என்ன செய்­ய­மு­டியும்? 

      அவரின் பொறுப்பின் கீழ் வரு­கின்ற அமைச்­சுகள் தொடர்­பான சட்­ட­மூ­லங்கள் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வேண்டும்.உண்­மையில் அவர் மாற்­று­வ­ழி­யின்றி தவிக்­க­வி­டப்­பட்­டி­ருக்­கிறார் என்­றுதான் சொல்­ல­வேண்டும்.ஐக்­கிய தேசிய கட்­சி­யுடன் அவர்  உற­வு­களைச் சீர்­செய்­து­கொண்டு அதன்­ அ­மைச்­சர்கள் ஊடாக தனது சட்­ட­மூ­லங்­களைச் சமர்ப்­பிக்­கலாம்.ஆனால், ஐக்­கிய தேசிய கட்சி அத்­த­கை­ய­தொரு ஏற்­பாட்­டுக்கு சம்­ம­திக்கும் என்­பது சந்­தே­க­மா­னதே. கடந்த வருட இறு­திப்­ப­கு­தியில்  மூண்ட அர­சியல் மற்றும் அர­சி­ய­ல­மைப்பு நெருக்­க­டி­களின் முடிவில் விக்­கி­ர­ம­சிங்க மீணடும் பிர­த­ம­ராக்­கப்­பட்­டதன் பின்னர் அவரின் புதிய அர­சாங்­கத்­து­ட­னான விவ­கா­ரங்­களில் ஜனா­தி­பதி சிறி­சேன கடந்த சில வாரங்­க­ளாகக் கடைப்­பி­டிக்­கின்ற குரோத உணர்­வு­ட­னான அணு­கு­மு­றை­களை அடிப்­ப­டை­யா­கக்­கொண்டு நோக்­கும்­போது ஐக்­கிய தேசிய கட்சி அவரை ' மடக்­கு­வ­தி­லேயே' குறி­யாக இருக்கும் என்­பதில் சந்­தே­க­மில்லை.

      ஜனா­தி­பதி தனது விருப்­பங்­களை அமைச்­ச­ரவை மீது திணிக்க முயற்­சிக்­கலாம்.ஆனால்,  சட்­ட­ரீ­தி­யா­கவும் அர­சியல் ரீதி­யா­கவும் அவரை வழிக்குக் கொண்­டு­வந்த பிறகு ஐக்­கிய தேசிய கட்சி அவ­ருக்கு அஞ்­சு­வ­தாக இல்லை. இன்­னொரு மாற்­று­வழி ஜனா­தி­ப­திக்கு இருக்­கி­றது.அதா­வது  ஜனா­தி­பதி தனது தோல்­வியை ஒப்­புக்­கொண்டு,  ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியில் இருந்து அண்­மையில் அர­சாங்கத் தரப்­புக்கு மாறி­ய­வர்­களில் ஒரு­வரை அமைச்­ச­ர­வைக்கு  நிய­மிக்­க­வைத்து அவரை பாரா­ளு­மன்­றத்­திற்குள் தனது பதி­லா­ளாக செயற்­ப­ட­வைக்­கலாம். அமைச்­ச­ரவை ஏற்­கெ­னவே நிரப்­பப்­பட்­டு­விட்­டதால் அத்­த­கை­ய­தொரு நகர்­வுக்கு ஐக்­கிய தேசிய கட்சி இணங்­குமா என்­பது ஒரு பிரச்­சினை. தங்­களால் சுல­ப­மாகக் கையா­ளக்­கூ­டிய ஒரு பல­வீ­ன­மான நிலைக்கு ஜனா­தி­ப­தியைக் கொண்­டு­வ­ரு­வ­தற்­காக அவரை உத­வி­யற்­ற­வ­ராக்கும் ஒரு திட்­டத்தை மன­திற்­கொண்டே ஐக்­கிய தேசிய கட்சி செயற்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கி­றது போலத் தெரி­கி­றது.

          ஜனா­தி­பதி தனது தற்­போ­தைய வியூ­கங்கள் சக­ல­வற்­றையும் தலை­கீ­ழாக மாற்­றிக்­கொண்டு மீண்டும் தேசிய அர­சாங்கம் ஒன்றை அமைக்­கவும் நாட்டம் காட்­டலாம். ஆனால், கடந்த அக்­டோ­பரில் கிடைத்த மோச­மான அனு­ப­வத்­திற்குப் பின்­னரும் கூட  அதி­கா­ரத்தைப் பகிர்ந்­து­கொள்­வ­தற்கு ஐக்­கிய தேசிய கட்சி விரும்­பினால் மாத்­தி­ரமே அது சாத்­தி­ய­மாகும்.அவ்­வாறு நடக்­கு­மானால், ஐக்­கிய மக்கள் முன்­ன­ணிக்குள் அதி­ருப்­தி­யா­ளர்­க­ளாகத் தங்­களைக் காட்­டிக்­கொண்டு அதே­வேளை ஜனா­தி­ப­திக்கு  விசு­வா­ச­மா­ன­வர்­க­ளாக செயற்­ப­டு­கின்­ற­வர்­களின் ஆத­ரவை அவர் இழக்­க­வேண்­டி­வரும்.அதற்குப் பிறகு பிர­தமர் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு ஒத்­தூ­து­கின்ற ஒரு ஜனா­தி­ப­தி­யா­கவே பத­விக்­கா­லத்தின் எஞ்­சிய பகு­தியை சிறி­சேன கடத்­த­வேண்­டி­யேற்­படும். தன்னால் பதவி நீக்­கப்­பட்டு, பிர­தமர் பத­விக்கு பொருத்­த­மில்­லா­தவர் என்று தானே நாட்­டு­மக்­க­ளுக்கு சுட்­டிக்­காட்­டிய ஒரு­வ­ருடன் அவ்­வாறு பணி­யாற்ற எந்த முகத்­துடன் சிறி­சே­ன­வினால் முடியும்?

       இறு­தி­யாக சிறி­சே­ன­வுக்கு இருக்­கக்­கூ­டிய தெரிவு தன்­வ­ச­மி­ருக்கும் அமைச்சுப் பொறுப்­புக்கள் சக­ல­தையும் துறந்து இன்­னொரு ' டி.பி.விஜே­துங்­க­வாக ' மாறு­வ­தே­யாகும்.ஆனால், தனது முத­லா­வது பத­விக்­கா­லத்தின் இறு­தியில் ஓய்வுபெறுவதற்கு அவர் தயாராவாரா என்பதே கேள்வி.இரண்டாவது பதவிக்காலம் மீதான நாட்டத்தை அவர் ஏற்கெனவே வெளிக்காட்டியிருக்கிறார் என்பதைக் கவனிக்கத் தவறக்கூடாது.       இன்று கிளம்பியிருக்கின்ற  அரசியல் குழப்பநிலையில் இருந்து விடுபடுவதற்கு 

 ஒரே வழி பொதுத்தேர்தலே என்று அரசியல் அவதானிகள் பலரும் நம்புகிறார்கள்.ஆனால், மக்களிடம் மீண்டும் போவது பற்றி அமைச்சர்கள் பேசுகின்ற போதிலும்  தற்போதைய தருணத்தில் எந்தவொரு தேர்தலையும் சந்திக்க ஐக்கிய தேசிய கட்சி மானசீகமாக விரும்பும் என்று கூறுவதற்கில்லை. அதேவேளை, அடுத்த பாராளுமன்றமும் எந்தவொரு கட்சிக்கும் அறுதிப்பெரும்பான்மை இல்லாததாக அமையாது என்பதற்கும் உத்தரவாதம் இல்லை. திடீர் ஜனாதிபதி தேர்தல் ஒன்றுக்குப் போவதற்கு சிறிசேன விரும்புவார் என்றும் கூறுவதற்கில்லை. இத்தகைய சூழ்நிலையில் மேலும் பல பிரச்சினைகள் தோன்றுவதற்கான தெளிவான அறிகுறிகளைத்தான் காணக்கூடியதாக இருக்கிறது.