Mar 20

சர்வதேச நீதிபதிகளை கொண்ட விசாரணையை ஒருபோதும் ஏற்க முடியாது; பிரதமர் ரணில்

அம்பாந்தோட்டை வீரகெட்டிய விகாரையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றுகையில்,

இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் குறித்த நீதியான விசாரணை முன்னெடுக்கப்படவேண்டும் என்பது தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கவனத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

எனினும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையினால் முன்வைக்கும் அனைத்து பரிந்துரைகளுக்கும் எம்மால் இணங்க முடியாது.

யுத்ததில் நடந்தது என்ன என்பது தொடர்பில் உண்மையை கண்டறிய வேண்டும். அதற்கு நாம் தயாராகவே உள்ளோம். ஆனாலும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை முன்வைக்கும் கோரிக்கைகள் அனைத்தையும் எம்மால் நிறைவேற்ற முடியாது.

குறிப்பாக சர்வதேச நீதிபதிகளை கொண்ட விசாரணைகள் ஒருபோதும் ஏற்க முடியாது. இதனை நிறைவேற்ற அரசியலமைப்பில் திருத்தங்கள் செய்ய வேண்டும். அதற்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை தேவைப்படும்.

எவ்வாறாயினும் இலங்கையின் இணை அனுசரனையுடன் மனித உரிமை பேரவையில் முன்வைக்கப்படவுள்ள தீர்மானத்தில் எம்மால் திருத்தங்கள் செய்ய முடியும்.

அதில் எந்தவொரு பிரச்சினையும் கிடையாது. எனினும் சர்வதேச நீதிபதிகளை ஏற்க முடியாது. எனவே சர்வதேச நிதிபதிகள் விவகாரம் போன்ற சில விடயதானங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் அறிவிப்போம் என்றார்.