Jun 26

வளரிளம் பருவத்தினரே சுதந்திர சீர்மிகு சமுதாயத்தின் அச்சாணிகள்...

பிரீடம் பண்ட் மற்றும் ஜெனிவா குளோபல் ஆதரவோடு கேர் தொண்டு நிறுவனம் ஈரோடு ஐ    மையமாகக் கொண்டு இம்மாவட்டத்தில் 30 கிராமங்களை தேர்ந்தெடுத்து வளரிளம் பருவத்தினருக்கான மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 

திட்ட நோக்கம்:

நோக்கம் 1 : வேலை சூழ்நிலையினால் ஏற்படும் மிக கடுமையான பாதிப்பிலிருந்து தடுத்து அவர்களை சுயசார்புடைய சுதந்திரத்துடன் வாழச்செய்வது மற்றும் கொத்தடிமை தனத்தால் பாதிக்கப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது.

நோக்கம் 2 :மேலாதிக்கத்தினரால் தொழிலாளர்களின் அடிமைத்தன உரிமை மீறளுக்கு எதிரான நடைமுறையை வலுப்படுத்துவது.

நோக்கம் 3 : தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் அவர்களின் சுதந்திரத்துக்குமான ஈடுப்பாட்டில் நூற்பு ஆலை மேலாண்மையை மேம்படுத்துவது போன்றவையாகும்.

வளரிள பருவ குழுக்களும், நோக்கமும்:  

கிராமங்கள் தோறும் வளரிளம் பருவத்தினருக்கான(ஆண்,பெண்) குழுக்கள் ஆரம்பிக்கப்பட்டு, குழந்தை தொழிலார் முறை, அடிமைத்தனம், பாலியல் இடர்பாடுகள் மற்றும் ஆரோக்ய குறைப்பாடுகள் இல்லா சுதந்திர சீர்மிகு சமுதாயம் காணுதலே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

ஊட்டச்சத்து கண்டறியும் மருத்துவ முகாம்:

இத்திட்டத்தின் வாயிலாக வளரிளம் பருவத்தினருக்கு ஊட்டச்சத்துக் கண்டறியும் மருத்துவ முகாம்கள் கிராமங்கள் வாயிலாக நடத்தப்பட்டு வருகிறது. இறுதி நாளான இன்று 200க்கும் மேற்பட்டவர்கள் இம்முகாமில் கலந்து கொண்டனர். அவர்களுக்கு மருத்துவ பரிசோதனையும், இரத்த பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. ஏறக்குறைய 90 சதவிகிதத்தினர் ஊட்டச்சத்து குறைவான நிலையில் இருக்கின்றனர் என்பது குறிப்பிட தக்கது. மேலும் அவர்களுக்கு ஊட்டச்சத்து மருந்துகளும், சரிவிகித உணவுமுறை மற்றும் தன் சுகாதாரம் போன்றவற்றிற்கும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.