Mar 20

விமலின் விளக்கமறியல் ஏப்ரல் 3 வரை நீடிப்பு

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் வீடமைப்பு நிர்மாணத்துறை, பொறியியல் மற்றும் பொது வசதிகள் தொடர்பிலான அமைச்சர் விமல் வீரவன்சவை  எதிர்வரும் ஏப்ரல் மூன்றாம் திகதி வரை விமல் வீரவன்சவை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதிவான் லங்கா ஜயரத்ன இன்று உத்தரவிட்டார்

40 அரச வாகனங்களை மோசடியாக பயன்படுத்தி, நம்பிக்கை துரோகம் செய்து மோசடி புரிந்தமை, மோசடிக்கு உதவி ஒத்தாசை அளித்தமை ஆகிய குற்றச் சாட்டின் கீழ் விமல் வீரவன்சவும் சம்பத் லொக்கு ஹென்னதிகவும் 1982 ஆம் ஆண்டின் 12 இலக்க பொதுச் சொத்து துஷ்பிரயோக சட்டத்தின் 5 (1) அத்தியாயத்தின் பிரகாரமும் தண்டனை சட்டக் கோவையின் 386,388 ஆகிய அத்தியாய்ங்களின் கீழும்  குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.