Jun 25

கனடாவில் தமிழ்ப் பெண்ணுக்கு அடித்த அதிஷ்டம்!

கனடாவில் கசினோ எனப்படும் சூதாட்ட நிலையத்திற்கு முதன்முறையாக சென்ற தமிழ் பெண்ணொருவருக்கு ஆறு இலட்சத்து 75 ஆயிரம் டொலர் அதிஷ்டம் கிடைத்துள்ளதாக கனடிய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

தனது 35 வது பிறந்த நாளை கொண்டாடிய பாலகௌரி குணசீலன் என்ற பெண் மொன்ட்றியலில் உள்ள சூதாட்ட நிலையத்திற்கு சென்று சூதாட்டத்தில் ஈடுபட்ட போது இந்தப் பெரும் பரிசு தொகையை வென்றுள்ளார். முதல் முறையாக சூதாட்ட நிலையத்திற்கு சென்று முதல் பரிசை வென்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

வாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு வாரமும் 1,000 டொலர் அல்லது 675,000 டொலராக மொத்த தொகையை பெற்றுக் கொள்வதா என்பதை பாலகௌரியே தீர்மானிக்குமாறு அறிவிக்கப்பட்டது.

கணக்கிட்டு பார்த்தால் 1000 டொலர் என்ற ரீதியில் 13 வருடங்களுக்கு அந்த பணம் செலுத்த நேரிடம். இதனால் ஒரே தடவையில் 675,000 டொலர் பணம் பாலகௌரிக்கு செலுத்தப்பட்டுள்ளதாக கனேடிய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.