Jun 25

தமிழீழ மாணவர் எழுச்சி நாளை முன்னிட்டு பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பினால் உயர்கல்வி அறிவுரைகள்.

பொன்னுத்துரை சிவகுமாரன் ஈழ விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒரு முன்னோடி ஆவார்.

யாழ்ப்பாணம், உரும்பிராயில் காவற்துறையினரின் சுற்றி வளைப்பில் நஞ்சருந்தி மரணமடைந்தார்.  சிவகுமாரன் அண்ணா யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் உயர்கல்வி கற்ற அந்தக் காலகட்டத்தில்தான் இலங்கையில் கல்வித் தரப்படுத்துதல் அறிமுகப்படுத்தப்பட்டது இத்தரப்படுத்தல் திட்டத்துக்கு எதிராகத் தொடங்கப்பட்ட தமிழ் மாணவர் பேரவையில் தன்னையும் முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு சிவகுமாரன் அண்ணா செயற்பட்டார்.

இன்று Lewisham சிவன் ஆலயத்தில் இடம்பெற்ற உயர்கல்வி பற்றிய அறிவுரைகள் மற்றும் கலந்தாலோசனை மிக சிறப்பாக இடம்பெற்றது. நிகழ்வின் தொடக்கத்தில் சிவகுமாரன் அண்ணாவிற்க்கான வணக்கத்தை செலுத்திக்கொண்டு சிவகுமாரன் அண்ணா மாணவனாக இருந்தும் ஈழ விடுதலைக்கு போராடியதினை இளையோர் அமைப்பினர் நிகழ்விற்கு வந்தவர்களுக்கு விளக்கினார்கள்.