Jun 24

எடின்பரோ விமான சேவைகள் தாமதமடையலாம்

ஸ்கொட்லாந்து தலைநகர் எடின்பரோவில் உள்ள விமான நிலையத்தில் விமான சேவைகள் தாமதமடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனால் குறித்த விமான நிலையத்திற்கு வரும் அல்லது அங்கிருந்து புறப்படும் பயணிகள் அசௌகரியத்தை சந்திக்க நேரிடலாம் என அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது போன்ற கால தாமதங்கள் கடந்த வருடத்திலும் ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அது குறித்து மேற்கொண்ட ஆய்வில் கடந்த வருடத்தில் மாத்திரம் சுமார் 110,000 விமான சேவைகள் உரிய நேரத்தை விட 15 நிமிடங்கள் கழித்தே பயணத்தை ஆரம்பித்துள்ளன என தெரிய வந்துள்ளது.

2015 ஆம் ஆண்டில் கால தாமதமாகி புறப்பட்ட விமான சேவைகளின் வீதம் 22 சதவீதமாக காணப்பட்ட நிலையில் கடந்த வருடம் அது 27 சதவீதமாக அதிகரித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.