Jun 24

கனடா சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக சீக்கிய பெண் நியமனம்

பல்பிந்தர் கவுர் செர்கில் என்ற சீக்கிய பெண், கனடா சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

பஞ்சாப் மாநிலம், ஜலந்தர் மாவட்டம் ருர்கா கலன் பகுதியில் பிறந்தவர் ஷெர்கில். இவருக்கு வயது நான்காக இருந்த போது குடும்பத்தினருடன் கனடாவுக்கு குடிபெயர்ந்தார். அங்கு வில்லியம்ஸ் லேக் பகுதியில் வசித்த அவர் சஸ்காட்சிவான் பல்கலையில் சட்டம் பயின்றார்.

பஞ்சாபை சேர்ந்த வரை திருமணம் செய்துள்ளார். அவர்களுக்கு ஒரு மகள் மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். சட்ட நிறுவனம் நடத்தி வந்த அவர், பல வழக்குகளில் ஆஜராகியுள்ளார். கனடாவில் சீக்கியர்களின் உரிமைக்காகவும் போராடியுள்ளார். 

இந்நிலையில், பல்பிந்தர் கவுர் செர்கில் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமிக்கப்படுவதாக கனடா சட்டம் மற்றும் நீதித்துறை ஜோடி வில்சன் அறிவித்துள்ளார். இந்த நியமனம் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் கூறியுள்ளார். ஷெர்கலுடன் மேலும் 2 பேர் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.