Jan 02

தமிழர் வரலாற்றில் தை மாதம்.! கண்டி இராச்சியத்தின் கடைசித் தமிழ் மன்னன்

கடைசித் தமிழ் மன்னன் கைதுசெய்யப்பட்டு நாடுகடத்தப்பட்டான்அன்று கண்டி இராச்சியத்தின் கடைசித் தமிழ் மன்னனானகண்ணுசாமி என்ற சிறீ விக்கிரம ராஜசிங்கனின் ஆட்சியைக்கைப்பற்றும் நோக்கில் படையெடுத்து வந்த ஆங்கிலப்படைகளிடம்பிலிமத்தலாவை , கலப்போலை தலைமையிலான சிங்களப்பிரதானிகளால் காட்டிக் கொடுக்கப்பட்டு 24.01.1815 அன்று இத்தமிழ்மன்னன் வேலுாருக்கு நாடுகடத்தப்பட்டான்.

★சிங்களச் சிறீ

தமிழர்களின் வாகனங்களில் பொருத்தப்பட்டது.!

சிங்களப் பேரினவாதத்தின் ஆசியோடு ஆட்சிபீட மேறிய

சிறீலங்காவின் இனவாத பிரதமர் எஸ்.டபிள்யு ஆர்.டி பண்டார நாயக்காவினால் சிங்களம் மட்டும் சட்டம் கொண்டு வரப்பட்டு தமிழீழப் பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டது. அதன் ஒரு கட்டமாக 1958.01.01 அன்று தமிழர்

பகுதிகளில் அனைத்து வாகனங்களிலும் சிங்கள சிறீ எழுத்தை

பொறிக்கவேண்டும் என்ற அநாகரிக இனவாத விதி அமுல்ப்படுத்தப்பட்டது.

★தமிழாராட்சி மாநாட்டுப் படுகொலை.!

10.01.1974 அன்று, சிறீலங்கா அரசின் பல்வேறு தடைகளையும்

மீறி யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட தமிழாராட்சி மாநாட்டு

நிகழ்வின்போது சிறிமா அரசின் சிங்களக் காவல்படைகளால் 9 அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டனர்

★கொக்கட்டிச்சோலைப் படுகொலை

1987.01. 28, 29, 30 ஆகிய நாட்களில் மகிழடித்தீவு, இறால் கொம்பனி, முனைக்காட்டுப் பகுதிகளில் 200 தமிழ்மக்கள் சிறீலங்கா விசேட அதிரடிப்படையினரால் சுட்டும் வெட்டியும் இனப்படுகொலை செய்யப்பட்டர்

★கப்டன் பண்டிதர்

யாழ். மாவட்டம் அச்சுவேலியில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் முகாமை 09.01.1985 அன்று சிறிலங்கா படையினரின் சுற்றிவளைத்து ஏற்பட்ட மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரும் – தளபதியுமான கப்டன் பண்டிதர் உட்பட ஆறு மாவீரர்களின்

★கப்டன் அருள் வீரச்சாவு

தாயகத்து விடுதலைக்காக 1986இல் தன்னை விடுதலைப் புலிகளோடு இணைத்துக் கொண்டவர் கப்டன் அருள் மாஸ்டர். தமிழீழ விடுதலைப் புலிகளால் பாவிக்கப்படும் துப்பாக்கி எறிகணை யானை அருள்-89 இவரால் வடிவமைக்கப்பட்டதாகும். 04.01.1988 அன் நீர்வேலிப் பகுதியில் ஏற்பட்ட இந்திய இனத்துரோக இராணுவத்துடனான மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.

★கிளாலிக் கடனீரேரிப் படுகொலை

1993.01.02 அன்று யாழ் குடாநாட்டிற்கும் வன் னிப் பகுதிக்குமான ஒரேயொரு போக்குவரத்துப் பாதையாக விளங்கிய கிளாலிக் கடனீரேரியூடாகப் படகுகளில் பயணம் செய்த அப்பாவித் தமிழர்கள் 52 பேர் இனவாத சிறீலங்காக் கடற்படையினரால் சுட்டும் வெட்டியும் கொல்லப்பட்டனர்.

★கேணல் கிட்டு .!

தமிழீழம் நோக்கி எம்.வி அகத் எனும் கப்பலில் பயணித்த வேளை கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்கள் வங்கக்கடலில் வைத்து இந்திய கடற்படையால் முற்றுகையிட்ட வேளை பாரத அரசின் நயவஞ்சகத்தால் 16.01.1993 அன்று கப்பலுடன் தம்மைத் தாமே தீயிட்டு அழித்து வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்கள்

★மேஜர் சோதியா

தமிழீழ ‘இதயம்பூமி’ மணலாற்றுக் கானகத்தில் 11.01.1990 அன்று சூகையீனம் காரணமாக வீரச்சாவைத் தழுவிக்கொண்டார் தமிழீழ விடுதலைப்புலிகளின் முதற்பெண் தளபதி மேஜர் சோதியா

★விடுதலைப் புலிகளின் படைய புலனாய்வுப்பிரிவுப் பொறுப்பாளர் கேணல் சாள்ஸ்.!

★மன்னார் மாவட்டத்தில் 05.01.2008 அன்று பள்ளமடுப் பகுதியில் சிறிலங்கா படைகளின் ஆழஊடுருவும் படைப்பிரிவு நடாத்திய கிளைமோர்த் தாக்குதலில் விடுதலைப் புலிகளின் படைய புலனாய்வுப்பிரிவுப் பொறுப்பாளர் கேணல் சாள்ஸ் (அருள்வேந்தன்) உட்பட நான்கு மாவீரர்கள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டர்

★வீரத் தமிழ்மகன் முத்துக்குமார்

தமிழீழத்தில் சிங்களப்பேரினவாத அரசின் இன அழிப்புப்போருக்கு எதிராக தமிழீழ மக்கள் நடாத்திவரும் விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், சிங்கள் அரச படைகளின் கொடூரமான தமிழின அழிப்புப் போருக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், ஏழு கோடி தொப்பிள்க்கொடி உறவுகளான தமிழக மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் முகமாக 29.01.2009 அன்று தீக்குளித்து தனது இன்னுயிரை அர்ப்பணித்தார் வீரத் தமிழ்மகன் முத்துக்குமார் அவர்கள்

★மாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை

ஈழத்தமிழர்களின் ஒரே தேசியத்தலைவர் மேதகு பிரபாகரன் வேலுப்பிள்ளை அவர்களை எம் தேசத்தின் விடிவுக்காய் தந்த எங்கள் மாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் தனது 86 வது வயதில் பனாகொடவில் இருக்கும் இராணுவ முகாமில் 2010ம் ஆண்டு தை மாதம் 6ம் திகதி தனது இறுதி மூச்சை எம் மண்ணுக்காக விட்டுச்சென்றார்.