Jan 02

இந்து சமுத்திரத்திலுள்ள மீன்களுக்குச் சமாதானம் - வ.அழகலிங்கம்

எல்லாமே வரலாற்று பின்னணியைப் பொறுத்தே தன்னைக் கண்டடைகிறது.வர்க்கத்திற்கு  மேலே ஒரு சமூக அறிவியல் இருக்குமென்றால் அது ஓர் அறிவியலே அல்ல. ஒடுக்கப்பட்ட நாடுகளின் முதலாளித்துவ விடுதலை இயக்கங்கள் மற்றும் ஒடுக்கும் நாட்டைச் சேர்ந்த பாட்டாளி வர்க்க விடுதலை இயக்கம் ஆகியவற்றுக்கிடையில் உள்ள இயைபுத் தொடர்புகளை முன்கூட்டியே மதிப்பிடுவது சாத்தியமில்லை.

ஆனால்ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தில் சிறிய தேசங்களின் வரலாற்று இயங்கியலானது அது ஒரு சுயாதீனமான ஒரு சக்திவாய்ந்த காரணியாக வராமல் இருக்கக் கூடும். ஆனால் அது ஒரு நொதிக்கும் பாத்திரத்தை வகிக்கக் கூடும். 

ஒரு பெருநோயை உண்டு பண்ணும் ஒரு கிருமியின் பாத்திரத்தை வகிக்கக் கூடும். இது உண்மையான  ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்தியாக, அதாவது சோஷலிச பாட்டாளி வர்க்கம்; எளுச்சிகொண்டு வர உதவக் கூடும்.

     இலங்கையின் இன்றய நிலை இதுதான். தமிழ்மக்களது விடுதலைப் போராட்டம் தோற்கடிக்கப் பட்டபோதும் மழை ஓய்ந்தும் தூவாணம் விடாதது போல இலங்கையைப் பெரும் கடன் சுமையில் தள்ளி மீண்டும் எழமுடியாமல் வைத்துள்ளது.

தமிழருசுக்; காட்சியின் அம்மணமான வெட்கங்கெட்ட காட்டிக் கொடுப்பினால் தமிழ் மக்கள் அந்தக்கட்சியைத் தோற்கடிப்பது நியதியாகி விட்டது. தமிழரசுக் கட்சி தோற்கடிக்கப் படும்பொழுது அதே காரணியால் வரலாற்றில் தோன்றிய யூ.என்.பியும் சிறீலங்கா சுதந்திரக் கட்சியும் சேர்ந்தே தொலைந்து போகும். இந்த மூன்று இனவாத முதலாளித்துவக் கட்சிக் கிடையேயுள்ள ஒன்றில் மற்றொன்று பரஸ்பரம் உதவியை நாடி நிற்கிற ஒன்றுக்கொன்று சார்புள்ள அனுகூல சத்துரவாக வகிபாகம் காலாவாதிகி விட்டது.

     இப்பொழுது சிறீலங்காவில் சோசலிசத்திற்கான எந்தவொரு தீர்மானகரமான விரோதத்தையும் தொழிலாள வர்க்கத்தின் வெகுஜனங்களில் காணமுடியாது. 

முதலாளித்துவ அரசவிரோதமே நன்னெறியின் முதல் அடியெடுப்பாக வெகுசனங்கள் உணருகிறார்கள். முதலாளித்தவத்தைக் காப்பாற்ற அனைத்து முயற்சிகளை எடுத்தாலும் அது அதன் சொந்த எடையால் வீழ்ந்து படுவது திண்ணம்;. எங்கு எங்கெல்லாம் துன்பம் இருக்கிறதோ அங்கங்கெல்லாம்   அரசாங்க எதிர்ப்பு போராட்டம் தன்னிச்சையாக ஒரே  நாளிலேயே வளர்ந்த விடுகிறன.

அண்மையில் இனக்கலவரத்தைத் தூண்டும் எண்ணற்ற  ஆத்திரமூட்டல்கள் புஸ்வாணமாகப் போய்விட்டன. அம்பாந்தோட்டையிலே சீனக் கடற்படை. திருகோணமலையில் அமெரிக்க ஏகாதிபத்தியக் கடற்படை. கொழும்பில் இலங்கையின் பரம்பரைத்துயரமான இ;ந்தியக் கடற்படை. காளான்கள்முளைக்கும் வேகத்தில்  பல நாட்டு உளவுப் படைகளும் என்.ஜி.ஓ இரகசியப் படைகளும். சிறிமாவோ பண்டாரநாயக்கி இந்து சமுத்திரத்தைச் சமாதானப் பிராந்தியமாக ஐ.நா வில் பிரகடனப் படுத்திய பொழுது அன்றய சுதந்திரன் எழுதியது, இந்து சமுத்திரத்திலுள்ள மீன்களுக்குச் சமாதானம். 

ஆனால் இன்று மக்களுக்குச் சமாதானம் இல்லை.  மீன்களுக்குச் சமாதானம் இல்லை. ஆட்சியாளர்களுக்குமில்லை. சுதந்திரனும் இல்லை.