Jun 24

நிலக்கீழ் இரயிலின் மேல் பகுதியில் உறங்கிய 13வயது சிறுமி கைது!

ரொறொன்ரோவில் நிறுத்தப்பட்டிருந்த நிலக்கீழ் இரயில் ஒன்றின் மேல் பகுதியில், உறங்கிய 13வயது சிறுமியை பொலிஸார் கைதுசெய்துள்ளார்.

யங் வீதி மற்றும் டேவிஸ்வில்லே அவெனியு பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இச்சம்பவம் நடந்துள்ளது.

முதுகுப் பையை தலையணையாக வைத்த வண்ணம் இச்சிறுமி உறங்கியதாகவும் இச்சிறுமியை வெளியேற்ற 600 வோல்ட் மின்சாரம் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு பகுதி மின்சாரத்தை துண்டிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சிறுமி எதற்காக இவ்வாறு செய்தார் என்பது தொடர்பான தகவலை பொலிஸார் வெளியிடவில்லை. இந்நிலையில் இது குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.