Mar 20

பொன்.இராதா உறுதிமொழி; தமிழக விவசாயிகளின் போராட்டம் கைவிடப்பட்டது

வறட்சியால் பாதிக்கப்பட்ட தமிழக விவசாயிகளின் பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்இ வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தொடர் போராட்டம் நடத்தினர்.

இப்போராட்டம் தொடர்பாக மத்திய நிதி அமைச்சர்  அருண் ஜெட்லி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருக்கு மத்திய வேளாண்மை அமைச்சர் ராதா மோகன்சிங் கடிதம் எழுதியுள்ளார். 

 விவசாயக் கடனை கட்டாயப்படுத்தி வசூலிக்கக் கூடாது என வங்கிகளை அறிவுறுத்தும்படி கூறியுள்ளார். மேலும்இ வறட்சி நிவாரணம் தொடர்பாக உயர்மட்டக் குழுவை கூட்டவும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார். அதன்படி மார்ச் 23இல் உயர்நிலை கூட்டம் கூடுகிறது. 

அதேசமயம், போராட்டம் நடத்திய விவசாயிகளை மத்திய அமைச்சர்  பொன்.ராதாகிருஷ்ணன் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார்.

மத்திய அரசு விவசாயிகளின் நலன்களை பாதுகாக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கும் என உறுதி அளித்தார்.இந்த பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு ஏற்பட்டது.

இதையடுத்து ஒரு வாரமாக நடைபெற்று வந்த போராட்டத்தை விவசாயிகள் கைவிட்டனர். மத்திய அமைச்சரை சந்திக்கும் வரை டெல்லியில் தங்கியிருக்க முடிவு செய்துள்ளனர்.