Jun 24

மகளிர் உலகக் கோப்பை: சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள்

மகளிர் உலகக் கோப்பைத் தொடர் இன்று துவங்க இருப்பதை முன்னிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

கூகுள் தனது டூடுல் சேவை மூலமாக உலகின் தலை சிறந்த மனிதர்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை கௌரவிக்கும் விதமாக வித்தியாசமான படங்களின் மூலமாக தனது பயனாருக்கு அந்த முக்கிய நிகழ்வுகளை தெரியப்படுத்துகிறது.

இந்த்யநிலையில் இங்கிலாந்தில் நடக்கும் மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று (ஜூன் 24) தொடங்குகிறது. முதல் நாளில் நியூசிலாந்து – இலங்கை அணிகளும் ,இங்கிலாந்து – இந்தியா அணிகளும் பலப்பரீட்சை நடத்தவிருக்கின்றன.

எனவே, மகளிர் உலகக் கோப்பை தொடர் இன்று நடைபெறுவதை முன்னிட்டு அதனை சிறப்பு செய்யும் விதமாக கூகுள் சிறப்பு டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது.