Dec 27

சுமந்திரனும் ஜனநாயகமும். - வ.அழகலிங்கம்

1978 ம் ஆண்டின் பயங்கரவாத தடுப்புச் சட்டம் இலங்கையில் ஒரு கொடூர சட்டமாகும். இது 24 யூலை 1979 சட்டமாகியது. சந்தேக நபர்களைத் தேட, கைது செய்ய பரந்த அதிகாரங்களைப் பொலிசுக்கு வழங்குகிறது.  கொடூரமான இச்சட்தின் பகுதிகளை ஓரளவாவது தெரிந்திருந்தாற்தான் இன்று ஆபிரகாம் சுமந்திரன் தமிழ் மக்களுக்குச் செய்யும்; மானிடக் கொடுமையை உணரமுடியும். இந்த மட்டத்திற்கு ஜே.ஆர். ஜெயவர்த்தனாவோ மஹிந்தா ராஜபக்ஸ்சவோ ஜனநாயகப் புழுகல் புழுகவில்லை.

இலங்கை 1979 லிருந்து இன்று வரை பயங்கரவாதத் தடைச் சட்டம் என்ற பாசிசச் சட்டத்தின் கீழ் ஆளப்படுகிறது. எத்தனையோ இராணுவ ஆட்சிகளில் இந்த மட்டத்திற்கு ஒடுக்குமுறைச்சட்டம் நிலவவில்லை. 150000 பேரைக் கொன்று தேசத்தைக் கல்லுக்குமேல் கல் இல்லாமற் செய்தபின்கூட இலங்கை அரசு இம்மியத்தனையும் திருந்தவில்லை. ஆபிரகாம் சுமந்திரன் காத்து மழைக்குக் கூட தமிழ் மக்கள் விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொள்ளாது நாலு சுவருக்குள் வாழ்ந்து;விட்டு வந்த மனிதன் ஆதலால் பழிக்கு அஞ்சாமல் இருப்பது ஏதும் புதமையல்ல. மழைக்கு நனைந்து வெய்யிலில் காய்ந்து வரலாற்றால் உயர்த்தப் பட்ட தலைவர்களுக்கும் ஒட்டு மாங்கன்றுகளைப் போல எங்கேயோ இருந்த கொப்பை ஏகாதிபத்தியங்கள் கொண்டு வந்து தமிழீழ மரத்தில் ஒட்டி விட்ட தலைவர்களுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான். தத்துவத்திலே இவர்களைப் போன்றவர்களை அதாவது சமுதாயத்தேர்டு ஊடாடாது, சமுதாயத்தோடு ஒட்டோ உறவோ இல்லாது நாலுசுவருக்குள் இருந்து சமுதாயத்திற்கு உபதேசிப்பவர்களை தூய நியாய வாதிகள் என்பார்கள். அதன் பின்விழைவுகளையும் பிரதி விளைவுகளையும் மக்கள் வெகுசீக்கிரத்தில் அனுபவிப்பார்கள்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் சில கூறுகள்:-    எந்தவொரு சட்டவிரோத செயல்களிலும் ஆராவது ஒருதனிநபரோ, சங்கமோ   குழுவோ  ஈடுபட்டால்அது இலங்கையிலோ அல்லது இலங்கைக்கு வெளியிலோ அவை குற்றமாகும்வாரண்ட் இல்லாமல் அதாவது உத்தரவு இல்லாமல்

1.எந்த நபரையும் கைது செய்யலாம்

2.எந்த இடத்திலும் உள்ளிட்டு தேடலாம்

3.எந்தத் தனிநபரையும் நிற்பாட்டிச் சோதிக்கலாம். எந்த வாகனங்கைளையும் நிறுத்திச் சோதிக்கலாம், கப்பல், ரயில,; விமானம்; போன்றவற்றையும் தடுத்துச் சோதிக்கலாம்.

4. எந்த ஆவணத்தையும் பறிமுதல் செய்யலாம். எந்தப் பொருளையும் பறிமுதல் செய்யலாம். எந்தவொரு ஒரு தனிநபர் சட்டவிரோதமான நடவடிக்கையில் ஈடுபடுகிறார் என்ற சந்தேகத்தின் பேரில கைது செய்யலாம்

5.கைது செய்யப்பட்ட எவரும் எழுபத்திரண்டு மணி நேரத்திற்கு(நாலாம் மாடியில்) காவலில் வைக்கப்படலாம்.

6. எந்த மனிதனையும் விசாரணையின் நோக்கத்திற்காக எந்த இடத்திற்கும் தேவைப்படும் நேரத்திற்கும்; விசாரணையின் நோக்கத்திற்காக கொண்டு செல்லலாம்

7. எந்த ஊடக வெளியீடுகளையும் தடை செய்யலாம்

8.பாதுகாப்பு படையினர்  நானாவிதப் புகார்களிலிருந்தும் தண்டனை 

விதிவிலக்குக்கான உத்தரவாதம் அளிக்கப் பட்டுள்ளனர்.

     ஆட்கொணர்வு மனு

1.ஒவ்வொரு குடிமகனுக்கும் நிர்வாக மற்றும் சட்டமன்றத்தின் அதிகப்படியான குற்றம் சுமத்தும் நடவடிக்கைகளில் இருந்து பாதுகாக்க உரிமை உண்டு,

2.ஒவ்வொரு தனி நபரும் தன்னிச்சையான அல்லது சட்டவிரோத கைதுகள் மூலம் தடுப்புக்காவலில் இருந்து சுதந்திரம் பெறும் உரிமை.

3. கைது செய்த பாதுகாப்பு அதிகாரிகள் கைதியைக் கட்டாயமாக நீதிமன்றத்த்pல் ஆயர் செய்ய வேண்டும்.

4.கைது செய்வதற்கான சட்டத்தின் செல்லுபடித் தன்மையைத் தீர்மானிக்க நீதிமன்றத்திற்கே அதிகாரம்  உண்டு.

5. கைதுசெய்யப்பட்ட கைதியை உயிரோடோ அல்லது பிணமாகவே நீதிமன்றில் காட்ட வேண்டும்.

ஆபிரகாம் சுமந்திரனின் கூற்று:

சர்வாதிகாரத்திற்கு நாட்டை இட்டுச் செல்வதை தடுக்க வேண்டும் என்பதற்காகவே முதலாவது மனுவை உச்ச நீதிமன்றத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சமர்ப்பித்தார். இதனால் தென்னிலங்கை மக்கள் மத்தியில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு மரியாதை ஏற்பட்டுள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி தெரிவித்தார்.

இந்த நாட்டை குடியரசாக இருந்து முடியரசாக மாற்றுவதற்கான சதிவேலைகள் அண்மையில் நடந்தேறியபோது அதனைத் தடுத்து நாட்டின் ஜனநாயத்தையும், இறைமையும் பாதுகாப்பதற்கே தமிழ்தேசிய கூட்டமைப்பும் இணைந்து கொண்டது.

இதனால் நீதிமன்றம் சென்று ஜனநாயக்தை உறுதிப்படுத்தியுள்ளோம். இதனால் தென்னிலங்கையில் மட்டுமல்ல சர்வதேசத்திலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு மரியாதை உள்ளது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ரணிலுக்கு ஆதரவாக நீதிமன்றம் சென்றதாக பலர் பேசுகின்றார்கள். ஆனால் ரணில் விக்கிரமசிங்கவுக்கோ அல்லது ஐக்கிய தேசிய கட்சிக்கோ நாம் நீதிமன்றம் செல்லவில்லை. நாட்டை சர்வதிகாரப்போக்குக்கு இட்டுச் செல்லாது ஜனநாயகத்தை பாதுகாக்கவே நீதிமன்றம் சென்றிருந்தோம். இந்த நாடு சர்வதிகாரப்போக்கிற்கு தள்ளப்படவிருந்தநிலையில் அதனை முளையோடு கிள்ளியெறிந்த நிலை தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கே இருப்பதாக பலராலும் பேசப்படுகின்றது.

     உண்மையின் உரைகல் நடைமுறை என்பர்ர்கள்.

     தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு     தென்னிலங்கையில் மட்டுமல்ல சர்வதேசத்திலும் மரியாதை உள்ளது.

     இந்தப்பெரிய மரியாதை எந்தத் தமிழ் தலைவர்களுக்கும் கிடைக்கவில்லை. 

இந்த மாபெரும் மரியாதையைத் தமிழ் மக்களுக்காகப் பாவித்தால் குறைந்தா போய்விடும். இந்த சர்வாதிகாரத்திலிருந்து நாட்டைக் காப்பாற்றிய ஆளுமையின் பேரால் தமிழ்மக்கள் இழந்துவிட்ட உரிமை எல்லா உரிமையையும் குறைந்தது ஒரு முறைமைக்காகவாவது அரசாங்கத்திடம் குறைந்த பட்சம் கேட்டாவது பார்க்கலாமே. 

ஓரு பெரிய ஜனநாயகம் நாட்டிலே ஏற்பட்டதென்றால் தமிழ்மக்களின் எல்லா ஜனநாயக உரிமைகளும் சந்தேகமற நிதர்சனமாகியிருக்க வேண்டும்.

     தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு சர்வதேசத்திலும் மரியாதை உள்ளது. இதைக் கூட ஒரு தடவை உரைத்துப் பார்க்கலாமே. அமெரிக்காவைத் தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமையை அங்கீகரிக்கும்படி கேட்டுப் பர்hக்கலாமே.

     திரு.ஆபிரகாம்சுமந்திரன் அவர்களே இலங்கையின் இறைமை வரலாற்றில் முதன்முதலாக காலிற்போட்டு நசுக்கப் பட்டது இப்பொழுதுதான். பழைய சிறிலங்காவுக்கான அமெரிக்ஸ்தானிகர் றொபேட் பிளாக் சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபாலா சிறீசேனாவை மிரட்டி ராஜபக்ஸ்சவை ராஜிநாமாச் செய்யப் பண்ணினார். பழைய காலனித்துவ நாடுகளை நாளாந்தம் கொள்ளையடித்து கபளீகரம்செய்யும் ஏகாதிபத்திய நாடுகளின் இராஜதந்திரிகள் வரலாற்றில் முதன்முதலாகப் பாராளமன்றத்திற்குள் நுளைந்து எமது இறைமையை மீறினார்கள். 

சுப்பிறீம் கோட்டில் நுளைந்து எமது நீதித்துறையை அவமதித்தார்கள். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பழைய வெளிநாட்டு அமைச்சர் ஓல்பிறிச் ஈறாக்கின் 500000 குழந்தைகள், குழந்தைகள் உணவும் மருந்தும் இல்லாமல் மரணித்தபொழுது  „அந்தக் குழந்தைகள் இறக்க தகுதியுடையவர்கள்' என்ற நரமாமிச பட்சணி. காலனி நாடான லிபியாவில் குண்டுமழை பொழிந்து கடாபியைக் கொல்வதை பறாக் ஒபாமாவும் கில்லரி கிளங்டனும் பார்த்து ரசித்து வைன் குடித்தது இணையத்தளங்களில் வைறலாகப் பரவியது. இலங்கையின் இறைமையை சுமந்திரன் விற்ற அளவுக்கு றணில்விக்கிரமசிங்காவோ ராஜபக்ஸ்சவோ விற்கவில்லை. சுவர் இருந்தாற்தான் சித்திரம் வரையலாம்.

     சுமந்திரன் அவர்களே உங்களால் இலங்கையின் இலவசக் கல்வியையும் இலவச வைத்திய வசதியையம் பாதுகாப்பேன் என்று ஒரு அறிக்கை வெளியிட முடியுமா? 

அப்படி விட்டால் அண்டே விட்டேன் கொண்டலடியென்று ஏகாதிபத்தியங்களும் நீங்கள் சொன்ன சர்வதேசநாடுகளும் உங்களைக் கைகழுவி விட்;டுவிடும்.

     இலங்கை ஒரு பொலீஸ் அ10ட்சி நாடு. ஓர் ஆசிரியரின் சம்பளத்திலும் ஒரு பொலீஸ் அதிக சம்பளம் எடுத்தால் அது ஒரு பொலீஸ் ஆட்சி நடைபெறும் என்பதே வரையறை. இலங்கையின் சனத்தொகையின்படி இலங்கையில் ஆகக் கூடியது 15000 இராணுவமே இருக்க வேண்டும். வடமாகாணத்திலேயே அதைவிடக் கூட. இந்தியாவோடு ஒப்பு நோக்கிப் பாருங்கள்.

     ஜனநாயகம் மற்றும் சட்டங்கள் பொருளாதாரத்திற்கு அடிபணிந்தவை. கட்டுப் பட்டவை. சுப்பிறீம் கோட் வழக்கால் மீண்டும் ஜனனாயகம் வரவில்லை. அமெரிக்கா தனது மெலனியம் நிதியை நிறுத்துவதாக மிரட்டியது. ஜப்பான் தனது நிதி உதவியை நிறுத்துவதாக மிரட்டியது. சர்வதேச நாணய சபை தனது நிதி கடன் கொடுப்பை நிறுத்துவதாக மிரட்டியது. ஐரோப்பிய ஜக்கியம் தமது ஜி பிளஸ் சலுகைகளை ரத்துச் செய்வதாக மிரட்டியது. இங்கிலாந்து கனடா அவுஸ்திரேலியத் தூதர்கள் வன்னிக்குச் சென்று பிரச்சாரம் செய்தனர். 14 வரலாற்றால் முந்தி அபிவித்தியடைந்த ஏகாதிபத்திய நாடுகளின் சிறீலங்காவுக்கு மேலான ஆக்கிரமிப்பே இது. உண்மையிலே ராஜதந்திர சம்பிரதாயப்படி மனிதகுலத்திற்கு எதிரான ஒரு சர்வதேச குற்றமாகும். சீறும் புயலும் மழையும் சேர்ந்தால் சின்னக்குடை தாங்காது. உலகம் முழுவதும் சிறிலங்கா உட்பட இந்த நாடுகளால் சிக்கன நடவடிக்கை திணிக்கப் பட்டுள்ளன. இப்பொழுது இலங்கை மூன்றாமுலக யுத்தத்தின் மையமாக ஆகி விட்டது. அதன் புதிய பெயர் இந்தோ பசிபிக் மூலோபாயம். புவியியல் நோக்கில் இந்தோ பசிபிக் என்ற அடைமொழி அவுஸ்திரேலியாவைத் தவிர வேறு ஒரு நாட்டிற்கும் பொருந்தாது. மக்களைப் பேய்க்காட்டுவதற்காக தாம் நினைத்த யுத்தக் கலைச் சொற்களை ஏகாபத்தியங்கள் கண்டுபிடித்துவிடும். அக்டோபர் 26 சதி 2015 சந்திரிக்கா குமாரத்துங்கா பில் கிளிங்டன் அறக் கட்டளையோடு சேர்ந்து செய்த சதிக்கு எதிரான மாற்றுச் சதி. இதிலே தமிழ் மக்கள் தலையிடுவதற்கு ஒன்றுமில்லை. 40000 தமிழ் மக்களை முள்ளிவாய்க்காலில் தாரைவார்த்து ஆகப் 10 வருடங்களே ஓடிவிட்டன. யுத்தக் கைதிகள்மேல் வழக்குக் கூட இன்னும் தொடரப் படவில்லை. ஓடுக்கப்பட்ட தமிழ்மக்களை ஏதோ அன்னியர்கள் போல நாடாத்துவதுதான் நடந்துகொண்டு இருக்கின்றது. மீண்டும் சுமந்திரனின் வர்க்க வாஞ்சைக்கு தமிழ்மக்கள் இரையாக வேண்டியுள்ளது.

     30 வருடம் யுத்தத்தால் அழிந்த நாட்டில் என்ன செய்திருக்க வேண்டும். யுத்தத்தால் அழிந்த ஜேர்மனி என்ன செய்தது. 1945 மே 8 இல் யுத்தம் நின்றது. 

1947 இல் ஜோமனியின் கடைசிக் கிராமத்துக்கும் மின் இணைப்பு, தொலைபேசித் தொடர்பு, வடிகால் வசதியை ஏற்படுத்தி முடித்தது. ஒவ்வொரு கிராமத்தையும் பாதுகாத்தது. கிராமத்தில் இருந்து வெளியேறியவர்களை மீண்டும் கூட்டிக் கொண்டுவந்து குடியேற்றி வசதிகள் செய்து கொடுத்தது. கிராமங்கள் வாழ்ந்தால்தான் சடங்கு சம்பிரதாயங்கள் பேணப்பட்டு கலாச்சாரம் மீண்டும் முகிழ்க்கும். கலாச்சாரம் அழிந்தால் ஓர் இனம் அழிந்து விடும். காலாச்சாரம் என்பது பழைய சம்பிரதாயங்களில் வேர் பாய்ச்சுவது. சம்பிரதாயங்களை நிராகரிப்பவர்கள் நாசகாரிகள்(வன்டல் ஸ்). கலாச்சாரத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் கெல்லி எறிபவர்கள்.

ஜேர்மனி நூற்றுக்கணக்கான அவமான கரமான ஒப்பந்துங்களைத் தனது யுத்தப் பகைவர்களோடு செய்தது. தனக்கு மூக்குப் போனாலும் எதிரிக்குச் சகுனப் பிழையாக இருக்கட்டும் என்று நடக்கவில்லை. போர்க்குற்றம் போர்க் குற்றம் என்று புலம்புவதை விடுத்து சிங்கள மக்களோடு அன்னியோன்னியமாக வாழ ஒரு வழியைக் கண்டு பிடிக்க வேண்டும். தமிழ்ப் பிரதேசக் கிராமங்கள் காப்பாற்றபட வேண்டும். வாழ வகையில்லா த வழிதுறை இல்லாத கிராமங்களுக்கு மக்கள் வரவேண்டும் என்று  எதிர்பார்ப்பது துரோகமாகும.; தமிழர்கள் அழிந்தது அதன் கடைசி ஆய்வில் அவர்களது சிங்கள விரோதத்தால் முஸ்லீம் விரோதத்தால,; தொழிலாளர் விரோதத்தால். உலகத்திலே ஜனநாயகத்தைக் கொண்டு வந்தவர்கள் பொறியியலாளர்கள். அரசியல்வாதிகள் அல்ல. தொழிற்புரட்சியே ஜனநாயகத்திற்கு வழி திறந்தது. ஜனநாயகம் தொழிற்புரட்சிக்கு வழி திறக்கவில்லை. தொழிற்துறைப் பொருட்களை ஏற்றமதி செய்யும் நாடே முன்னேறும். விவசாய நாடு தேங்கி அழிந்துவிடும். இலங்கையின் இன்றய பிரச்சனை தொழிலநுட்பங்கள் சீனாவுக்குச் சென்றதால் மாத்திரம் ஏற்பட்டது. என்ன மாதிரி ஐரோப்பிய தொழில் நுட்பங்கள் அமெரிக்காவுக்குச் சென்றதால் பிரச்சனைகள் ஏற்பட்டதோ அதேபோல் சீன அமெரிக்கப் பிரச்சனை. யுத்தத்தையோ சமாதானத்தையோ உலகச் சந்தையே தீர்மானிப்பவை.

உற்பத்தியிலே மேன்மை ஏற்படும்பொழுது உற்பத்தி உறவுகளிலே மேன்மை ஏற்பட்டு சிந்தனைகளிலே மேன்மை ஏற்பட்டுவிடும். வரலாற்றில் என்றுமில்லாத அளவுக்கு இலங்கை உலகத்தேர்டு பின்னிப் பிணைந்து பரஸ்பரம் தங்கியுள்ளது. தமிழர்களும் என்றுமில்லாத மட்டத்திற்கு சிங்களமக்களோடு பரஸ்பரம் தங்கியுள்ளவர்கள். 

மற்றவையெல்லாம் ஆபத்துக்கு உதவாத தூரத்துத் தண்ணீர்கள்.