Mar 20

இனவாத சக்திகளுடன் போராடவேண்டிய நிலை; சபாநாயகர்

தேசிய சமத்துவத்தை உருவாக்க இனவாத சக்திகளுடன் போராடவேண்டிய நிலைமை உள்ளதாக  சபாநாயகர் கருஜெயசூரிய தெரிவித்தார்  

வெலிகம பிரகடனம் மீதான ஒரு பார்வை எனும் தலைப்பில் இம்தியாஸ் பாகிர் மாக்கர் மையம் ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடல் நிகழ்வு இலங்கை தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது.

கடந்துவந்த பாதையை திரும்பி பார்க்கும் போது நாம் நல்லதொரு மாற்றம் ஒன்றை உருவாக்கியுள்ளோம்.

அவர் மேலும் கூறுகையில்,

மக்கள் அமைதியாகவும்  ஒற்றுமையாக வாழும் நாட்டை உருவாக்க வேண்டும் என்பதை நாம் எதிர்பபர்த்தோம். அது இன்று கிடைத்துள்ளது.

தேசிய சமத்துவம் உருவாக்கப்பட வேண்டும். அதை உருவாக்க நாம் அனைவரும் முன்வர வேண்டும். அன்று நாம் தேசிய சமத்துவத்தை உருவாக்கும் வேலைத்திட்டங்களை முன்னெடுத்தோம்.

இடையில் இனவாதம் தலை தூக்கியது. இன்றும் தேசிய சமத்துவத்தை உருவாக்க இனவாதிளுடன் போராட வேண்டியுள்ளது என்றார்.