Jun 23

கனடாவிலேயே மிகவும் செலவு கூடிய நகரம் எது தெரியுமா?

கனடாவிலேயே அதிக செலவு கூடிய நகரமாக வன்கூவர் பட்டியலிடப்பட்டுள்ளது.

அதேவேளை உலக அளவில் செலவு கூடிய நகரங்களின் பட்டியலில் வன்கூவர் 107ஆவது இடத்தினைப் பிடித்துள்ளது.

இதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டில் முன்னணியில் இருந்த ரொரன்ரோ நகரை பின்தள்ளிவிட்டு, தற்போது 2017ஆம் ஆண்டில் வன்கூவர் 107ஆவது இடத்தினைப் பிடித்துள்ள நிலையில், ரொரன்ரோ 119ஆவது இடத்திலும், மொன்றியல் 129ஆவது இடத்திலும் பட்டியலிடப்பட்டுள்ளன.

அந்த வகையில் கனடாவைப் பொறுத்த வரையில் வன்கூவர் அதிக செலவு கூடிய நகரமாகவும், ஒட்டாவா(143) மிகவும் செலவு குறைந்த நகரமாகவும் பட்டியலிடப்பட்டுள்ளன.

உலக அளவில் பிரசித்தி பெற்ற ஐந்து நாடுகளின் 209 பெருநகரங்களில் இருந்து இந்த பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.

அந்தந்த நகரங்களில் காணப்படும் வீட்டு விலைகள், வாடகை, போக்குவரத்து, உணவு, உடை, வீட்டு உபகரணப் பொருட்கள், உல்லாச வாழ்க்கை என்பவற்றுக்கு ஆகும் செலவுகளின் அடிப்படையில் இநத பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் வெளிநாட்டினருக்கு அதிகம் செலவுள்ள நகரங்களாக, அங்கோலாவின் தலைநகர் லுவான்டா முதலாவது இடத்தில் பதிவாகியுள்ளது.

அதனை அடுத்து முறையே அடுத்தடுத்த இடங்களில், ஹொங்கொங், டோக்கியோ, சூரிச், சிங்கப்பூர் ஆகிய நகரங்கள் செலவீனம் கூடிய இடங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.


TOP 10

1 Luanda, Angola

2 Hong Kong

3 Tokyo, Japan

4 Zürich, Switzerland

5 Singapore

6 Seoul, South Korea

7 Geneva, Switzerland

8 Shanghai, China

9 New York City, U.S.

10 Bern, Switzerland


BOTTOM 10

200 Minsk, Belarus

201 Karachi, Pakistan

202 Sarajevo, Bosnia and Herzegovina

203 Monterrey, Mexico

204 Tbilisi, Georgia

205 Blantyre, Malawi

206 Windhoek, Namibia

207 Skopje, Macedonia

208 Bishkek, Kyrgyzstan

209 Tunis, Tunisia