Mar 20

மதவாச்சியில் விபத்து; பட்டா சரதி பலி

மதவாச்சி, பூனாவைப் பகுதியில் இன்று  இடம்பெற்ற வாகன விபத்தில் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

ரம்பாவ பகுதியிலிருந்து வவுனியா நோக்கிப் பயணித்த அரிசி மூடைகளை ஏற்றிய பட்டா ரக வாகனம் இன்று  மாலை 4.30 மணியளவில் மதவாச்சி, பூனாவைப் பகுதியில் மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் பட்டா ரக வாகனத்தின் சாரதியான கல்குனாமடு பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய அபல் தாரக்க சஞ்சீவ விமலசேன சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மதவாச்சிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.