Jun 22

பிரெக்சிற் உடன்படிக்கைக்கே தெரேசா அரசாங்கம் முன்னுரிமை – மகாராணி

பிரித்தானியாவிற்கு சிறந்த பிரெக்சிற் ஒப்பந்தங்களை ஏற்படுத்துவதுடன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான விதிகளில் பரந்த ஒருமித்த கருத்தினை வென்றெடுப்பதுமே தெரேசா மே அரசாங்கத்தின் முதல் நோக்கம் என்று மகாராணி எலிசபெத் தெரிவித்துள்ளார்.

நேற்று புதன்கிழமை பிரித்தானிய நாடாளுமன்ற ஆரம்ப அமர்வில் உரையாற்றும் போதே மகாராணி மேற்படி தெரிவித்துள்ளார்.

இதன்போது, ‘ஐரோப்பிய ஒன்றிய சட்டத்தினை பிரித்தானிய சட்டத்திற்கு மாற்றுவதற்கான ‘Great Repeal’ சட்டமூலத்தினை  அரசாங்கம் அறிமுகப்படுத்துகிறது. அத்துடன் குடியேற்றம், சர்வதேச தடைகள், அணுசக்தி பாதுகாப்பு, விவசாயம் மற்றும் மீன்வளர்ப்பு உள்ளிட்ட விவகாரங்களில் புதிய கொள்கைகளையும் வழங்குகிறது’ என்றும் மகாராணி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியில் பிரித்தானியாவின் எதிர்காலத்தின் பரந்த சாத்தியமான ஒருமித்த கருத்தினை கட்டியெழுப்புவதற்காக நாடாளுமன்றத்துடன் இணைந்து பணியாற்றுவதற்கு அமைச்சர்கள் உறுதியளித்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.

சுங்க வரி தொடர்பான சட்டமூலமானது ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும்போது பிரித்தானியாவின் தனித்துவமான சுங்க ஆட்சியை உறுதி செய்யும் என்று தெரிவிக்கப்படுகின்றது.