Jun 22

ஃபின்ஸ்பரி பார்க் தாக்குதல் பகுதிக்கு இளவரசர் சார்லஸ் விஜயம்

வடக்கு லண்டன் ஃபின்ஸ்பரி பார்க் பகுதியில் பாதசாரிகள் மீது வாகனத்தால் மோதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் செய்தி கேட்டு மகாராணி எலிசபெத் அதிர்ச்சியடைந்ததாக இளவரசர் சார்லஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமை மேற்படி தாக்குதல் இடம்பெற்றிருந்த நிலையில் நேற்று (புதன்கிழமை) குறித்த பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட இளவரசர் சார்லஸ் சமூக தலைவர்களை சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பின்போதே அவர் மேற்படி தெரிவித்துள்ளார்.

இதன்போது ‘ 30 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு விஜயம் மேற்கொண்டதை நான் நினைவில் வைத்துள்ளேன். இந்த சம்பவத்தால் அவர் அதிர்ச்சியடைந்ததாக மகாராணி தெரிவித்துள்ளார். சமுதாய உறவுகளில் நீங்கள் அனைவரும் ஒன்றுபட்டுள்ளீர்கள் என்பது எனக்கு தெரியும். இது அற்புதமான விடயம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.