Jun 22

வீட்டில் 46 விலங்குகளுடன் வாழ்ந்து வரும் அதிசய பெண்மணி!

ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு விலங்குகள் மீது அலாதி பிரியம் இருக்க தான் செய்கிறது. செல்ல பிராணிகளை குழந்தைகளை போல காணும் பார்வை பெண்கள் மத்தியில் அதிகம்.

ஆண்கள் சகோதரன் போல தான் பார்ப்பார்கள். இவர் பெயர் ஷாலினி அகர்வால். இவருக்கு விலங்குகள் என்றால் கொள்ளை பிரியம். இவர் தான் வாழ்ந்து வரும் 2 பி.எச்.கே பிளாட்டில் 46 செல்ல பிராணிகளை வளர்த்து வருகிறார்.

சதா சத்த மயம்தான்!

ஷாலினி அகர்வால் குடியிருக்கும் பிளாட்டிற்கு நீங்கள் சென்றால் நாய் குரைப்பது, பறவைகள் பாடும் சப்தங்களை நீங்கள் 24x7 கேட்கலாம். தன் வீட்டை ஒரு விலங்குகள் காப்பகம் போல வைத்துள்ளார் ஷாலினி அகர்வால். அப்பா இடம் இருந்து வந்த ஆசை... ஷாலினி அகர்வாலின் தந்தையும் ஒரு செல்ல பிராணி பிரியர். அவரிடம் இருந்து பார்த்து வளர்ந்து தானும் இப்படி செல்ல பிராணி பிரியை ஆகிவிட்டேன் என்கிறார் ஷாலினி.

உண்மையான நேசம்!

சாலைகளில் எங்கேனும் அடிப்பட்டு, நிர்கதியாய் இருக்கும் விலங்குகளை இரண்டாம் எண்ணம் இல்லாமல் உடனே வீட்டிற்கு எடுத்து வந்து விடுவாராம் ஷாலினி. இவர் வளர்த்து வரும் செல்ல பிராணிகள் இவருடன் பல வருடங்களாக வாழ்ந்து வருபவை.

2 பி.எச்.கே.

இவரது வீடு ஒரு சிறிய அனிமல் கிங்டம் என கூறலாம். இதில் மூன்று மாத கழுகில் இருந்து பூனை, குரங்கு, ஆடு, மாடு என பல செல்ல பிராணிகள் இருக்கின்றன. விலங்குகள் பாதுகாப்பிற்காக கடந்த 20 வருடமாக உழைத்து வருகிறார். ஷாலினிக்கு இப்போது வயது 36.