Dec 10

கனவோ அன்றி நனவோ பகுத்தறிவே பொய் பேசாதே! வ.அழகலிங்கம்

பருந்தும் கிளியும் ஒரு கூட்டில் வாழும் இலங்கைப் பாரளுமன்றம்.சிங்களச் சிங்கத்தின் முலையிலே தமிழ்ப் பசுக்கன்று பால் குடிக்கிறது.

     மந்திரி சுமந்திரன் தமிழ் மக்கள்; கேட்டதெல்லாவற்றையும் கேலி கிண்டல் செய்யாமல் அள்ளிக் கொடுத்த சக்கரவர்த்தி றணில் விக்கிரமங்சிங்காவின் அறக்காவலர் ஆகிவிட்டார்.

1.மந்திரி சுமந்திரன் தமிழர் எல்லோரும் கோபித்தாலும் அதைப் பற்றிக் கவலைப்பட மாட்டார்.

2.ராஜபக்ஸ்சவின் காடையர்களினால் அவர் உயிருக்கு வரும் ஆபத்தைப் பொருட் படுத்த மாட்டார். அவர் அமெரிக்க ஏகாதிபத்தியம் என்ற பெருமரத்தைத் தலைமறைவிற் சுற்றும் பல்லி ஆதலால்

3. றணிலுக்கு ஜனநாயகம் பற்றித் தொடர்ந்து சொல்லுவார். றணில், ஜே.ஆர் ஆட்சியில் மந்திரியாக இருந்து தமிழர்கொலைகளின் பங்காளியாகஇருந்தாலும் தொடர்ந்து ஜனநாயக நீதியைச் சொல்லிக் கொடுப்பார்.

4.1988-1989 பிரேமதாசா காலப்பகுதியில் ஜே.வி.பி கிளர்ச்சியின் போது மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) உறுப்பினர்களைச் சித்திரவதை செய்து அழித்த „பத்தலந்தா' தடுப்பு முகாமுக்கு ரணில் விக்கிரமசிங்கசிங்காவே அதிகாரியாக இருந்தார். ஜே.வி.பி செயற்பாட்டாளர்களில் கிட்டத்தட்ட 5,000-10,000 உறுப்பினர்கள் இந்த முகாமில் கொடூரமாக கொல்லப்பட்டனர். இந்தத் தடுப்பு நிலையத்தின் அரசியல் அதிகாரம் ஜனநாயகப் பிரமம் ரணில் விக்கிரமசிங்கவிடம் இருந்தது. பத்தலந்தா சித்திரவதை மையத்தில் மனித உரிமை மீறல்கள் மற்றும் குற்றங்கள் மீறப்பட்டதை விசாரிக்க சந்திரிக்கா குமாரதுங்க அரசாங்கம் பத்தலந்தா கமிசனை நியமித்தது. எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க அரசாங்கம் ஆணைக்குழு பரிந்துரை செய்தது. இருப்பினும் இன்றுவரை எந்த அரசாங்கமும் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை. வெலிக்கடைப் படுகொலை நடந்தபொழுது குட்டிமணியின் கண்ணைத் தோண்டியதை எத்தனை படப்பிடிப்பாளர்கள் படமெடுத்தர்ர்கள். சில படங்களை நாம் முதல் முதலாகச் அப்பொழுது நாம் நடாத்திக் கொண்டிருந்த „எண்ணம்' பத்திரிகையில் பிரசுரித்தோம். தமிழ் பாராளமன்றவாதிகள் அதுக்கெதிராகப் பாராளமன்றத்தில் கதைக்காதது  மாத்திரமல்ல அன்றே விட்டேன் கொண்டலடி என்று தமிழ் நாட்டுக்கு ஓடிப் போய் விட்டார்கள். 

இதைப் பற்றி தமிழர்கள் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. 1965 இல் ஒருதடவை அன்றய பருத்தித்துறைப் பாரளுமன்ற அங்கத்தவர் என் நண்பர்களோடு கலந்துரையாடுவதைக் கிரகிப்பதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. அவர் அன்று ஒரு தத்துவத்தை உபதேசித்தர்ர். நாய் ஒன்று ஒரு நல்லவனைக் கடித்ததற்காக அதைத் தண்டித்தால் அது கள்ளனையும் கடியாமல் விட்டுவிடும். அதை மேலும் விளக்கமாகச் சொன்னார். பொலீஸ் இராணுவம் மற்றும் அரச பதவிகளில் உள்ளவர்களை அவர்கள் என்ன பிழைவிட்டாலும் அரசு தண்டிக்காது. அப்படித் தண்டித்தால் அரசுக்கெதிரான கிளர்ச்சி எழுச்சி வரும்பொழுது இந்த அரசபடைகளும் அரச அதிகாரிகளும் அரசைக் காப்பாற்ற மாட்டர்ர்கள். வேலியே பயிரை மேயிற யதார்த்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அறுவது வருச எனது அரசியல் வாழ்வில் இது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப் பட்டதை நான் கற்றிருக்கிறேன். ஜனநாயக றணில் விக்கிரமசிங்கா செய்த கொடுமைகளை அறிய வேண்டுமானால்  ; -பத்தலந்தா-வில் நடந்ததை விசாரணை செய்யவேண்டும். மந்திரி சுமந்திரனின் ஜனநாயகப் பம்மாத்து அத்தனையும் ஆவியாகிவிடும். பாராளுமன்றமே கள்ளர்கள் குகையாகி விட்டதை இலங்கை மக்கள் நன்றாகவே விளங்கிவிட்டார்கள். வரப்போற தேர்தலில் தேர்தற் பகிஸ்கரிப்புக்குக் காலம் கனிந்துவிட்டது. இப்பொழுதும் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்று கேத்திரகணித நிரூபணங்களை வழங்கிக் கொண்டிருக்கும் தமிழ்மக்கள் என்ன செய்வார்களோ ஆரறிவார் பராபரமே.

பிணைப் பத்திர மோசடி

   இலங்கையின் வரலாற்றில் மிகப் பெரிய நிதி மோசடி இந்தப் பிணைப்பத்திர மோசடிதான். ஸ்ரீPலங்கா வரலாற்றில் நடைபெற்ற மிகப்பெரிய நிதி மோசடியில் இலங்கைப் பிரதமர் றணில் விக்கிரமசிங்காவும் மத்தியவங்கி முகாமையாளர் லக்ஷ்மன் அர்ஜுனா மகேந்திரன் உட்படப் பல பெரிய மனிதர்கள் சம்பந்தப்பட்டது 

உண்மையிலேயே வருத்தமளிக்கிறது. மத்திய வங்கி கருவூல பிணைக் கூப்பன் மோசடிபற்றி உலக ஊடகங்கள் பல எழுதின.

    இந்த நிதிமோசடியின் பிரதம கர்த்தா இலங்கையிற் பிறந்த சிங்கப்பூர் பொருளாதார வல்லுனரும் வங்கியாளரும் ஆன அர்ஜுன மகேந்திரன் என்பவர் ஆவார். 

பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கவால் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு   அழைக்கப்பட்டவர். 1 ஜனவரி 2015   ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் கவர்னர் ஆக நியமிக்கப் பட்டவர்;. இவர் 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரை பணியாற்றினார். இவரை றணில் விக்கிரமசிங்காவின் சிபரிசின் பேரிலேயே மத்திய வங்கி முகாமையாளராக்கினார்கள்.

அவர் ஓர் இலங்கையர் அல்லாதவர் ஆதலால் மத்தியவங்கி முகாமையாளர் ஆவதற்குச் சட்டப்படி தகுதி அற்றவர். இது மாபெரும் சட்டவிரோத நடவடிக்கை. பிப்ரவரி 2015 ல் இலங்கை மத்திய வங்கி; ரூ. 1. பில்லியன் அரசாங்க பிணைக் கூப்பன்கள் 12.5 வீதவட்டிதருவாதாக உறுதியளித்து 30 ஆண்டுகாலக் காலக்கெடுவோடு வினியோகிப்பாதாக விளம்பரப் படுத்தியது. ஆனால் யாருக்கும் தெரியாமல் ரூ.20 பில்லியன் பெறுமதியான பிணைக்கூப்பன்களை அச்சடித்து வினியோக்தனர். உலகின் பல நிதிநிறுவனங்களே இதை முதலில் கண்டுபித்தவர்களாகும்.

     பிணைப்பத்திர ஊழல் அம்பலப்படுத்திய பின்னரும் பிரதம மந்திரி அர்ஜுனா மகேந்திரனுக்காகத் தொடர்ந்து நிரபராதி என்று வாதாடினார். அர்ஜுனா மகேந்திரன் பொது ஏலத்திற்கே சென்றார் என்று பிரதம மந்திரி வலியுறுத்தினார், 

பின்னர் கமிஷனில் அவர் மஹேந்திரன் ஏலத்தில் கலந்து கொள்வதை மட்டுமே விரும்பினார் என்று கூறினார். 2016 ம் ஆண்டு மகேந்திரன் நாட்டை விட்டு வெளியேறிய பின்னரும் பிரதம மந்திரி மீண்டும் அவரை பாதுகாத்தார். மேலும், உதயங்கா வீரதுங்கவைப் போல அர்ஜுனா மகேந்திரன் நாட்டை விட்டு வெளியேறவில்லை என்று பிரதமர் றணில் விக்கிரமசிங்கா தொடர்ந்து வாதாடினார். வேலிக்கு ஓணான் சாட்சியாக இருப்பது போல பிரதம மந்திரி மகேந்திரனைத் தொடர்ந்து பாதுகாத்த விடயங்கள் அம்பலமாகின. இப்பிரச்சனை எவ்வாறு தோன்றியது என்பதை நீங்கள் பார்க்கலாம். பிரதமர் சொன்னர்ர்: 'நீங்கள் கவலைப்படாதேயுங்கோ. அவர்; ஒரு திருமண வைபவத்திற்குச் சிங்கப்பூர் சென்றுள்ளார். அவர் கட்டாயம் நாளை திரும்பி வருவார்.' பிரதமருக்கு அந்தக் காசைத் திருப்பிக் கொணர்வதற்கு ஒரு தார்மீக பொறுப்பும் இல்லையாம். இந்த கொள்ளை நடைபெறவில்லை என்றால், குறைந்தபட்சம் ஏழைகளுக்கு ஒரு நாளுக்கு ஒரு நாளை உணவு கொடுத்திருக்கலாம்., இதயம் மற்றும் சிறுநீரக நோயாளிகள் போன்றோருக்குச் சிகச்சை செய்திருக்கலாம். 

தொழிலாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தற்கொலை விவசாயிகள் பிரச்சினைகள் அனைத்தையும்; தீரர்த்திருக்க முடியும். இந்தக் கொள்ளையின் மூலம், மல்வானாவில் மாளிகைகள் கட்டப்பட்டு, கம்பஹா, மாத்தறை ஆகியவற்றில் மில்லியன் கணக்கான பெறுமதியுள்ள மாளிகைகளைக் கொள்வனவு செய்தனர். சர்தேச நிதி முதலைகளின் நெருக்குவாரத்திலிருந்து நாணயம் தவறாமையைப் பாது காக்க ஜனாதிபதி சிறீசேனாவுக்குப் புத்திமதி கூறப்பட்டது. அந்தக் குற்றவாழியான பிரதமர் றணில் விக்கிரம சிங்காவை நீக்கி வேறொருவரைப் பிரதமராக நியமிப்பது. அப்படி அவரை நீக்கினால் குற்றத் தண்டனையிலிருந்து விதிவிலக்கு இல்லாமல் போய்விடும். முதலாளித்துவ உலகிலே இரண்டு குற்றங்களைச் செய்தால் அதிலிருந்து மீண்டு; சிவில் வாழ்க்கைக்கு அதாவது குடிமகனாகவே குடிமகளாகவோ வாழ இயலாது. 

ஒன்று வாங்கிய வங்கிக் கடனை கட்டாமல் விடுவது. மற்றயது வருமான வரி மோசடி. 

இந்த இரண்டு குற்றங்களுக்கும் அவை மிகச் சிறிதாக இருந்தாலுங் கூடத் தண்டனை சிறைவாசம். உலக முதலாளித்துவ நாடுகள் எல்லாவற்றிலும் இதுதான் நடைமுறை. உலகில் வங்கிக் கடனைக் கட்டாமையால் தற்கொலை செய்த விவசாயிகள் பல ஆயிரும். 

அதிலும் புள்ளிவிபரப்படி சராசரி அதிக கடன் கட்டாமையால் தற்கொரலை செய்த பிரதேசம் இலங்கையின் குருநாகல் மாவட்டம். செய்த கிறிமினல் குற்றத்திலிருந்து விதிவிலக்குப் பெறவே றணில் விக்கிரமசிங்கா பிரதமர் வாசஸ்த்தலத்திலிருந்து வெளிறேத முதற் காரணம். யூ.என்பியின் எல்லாக் கள்ளரும் தமிழர்விடுதலை கூட்டணியின் எல்லாக் கள்ளரும் அவரைப் பாதுகாக்க வரிந்து கட்டிப் புறப்பட்டு விட்டார்கள். யூ.என்.பி காறர் எவரும் விக்கிரமசிங்காவைக் காப்பாற்றுமுகமாக பிதமர் பொறுப்பை ஏற்க மறுக்கவே ராஜபக்ஸ்ச பிரதமராகவேண்டிய தற்செயல், இந்த கூட்டுக் கள்ளர்களுக்குப் பொது மக்கள் கண்களில் மண்ணைத் தூவ வாய்ப்;பாகி விட்டது. „ஏழைகளின் இரும்புக் கோட்டைகளைக்கூடப் பணக்காரரின் துரும்பு உடைத்துவிடும் என்று ஷேக்ஸ்பியர் சொல்லியிருக்கிறார்.

     யூ.என்.பியின் ஜனநாயகப் பட்டியல்

1. 15 லட்சம் தமிழர்களின் பிரயா உரிமையைப் பறித்தது.

2.களனி மகாநாட்டில் தனிச் சிங்களச் சட்டம் கொண்டு வருவதாகச் சூழுரைத்தது.

3. பண்டா செல்வா ஒப்பந்தத்திற்கு எதிராகக் கண்டி யாத்திரை செய்து பண்டாரநாயக்கா செல்வநாயகம் ஒப்பந்தத்தைக் கிழிப்பித்தது.

4. 1977 இனக் கலவரத்தை; தூண்டியது மாத்திரமல்ல ஜே. ஆர் ஜெயவர்த்தனா „சட்டனட்ட சட்டன், சாமையட்ட சாமய' பேசி அதா சண்டையெண்டால் சண்டை, சமாதானமென்றால் சமாதானம் என்று கூறி இனக்கலவரத்தை ஊதிப் பெருப்பித்தது.

5.1981 இனக் கலவரம்

6. யாழ் நூல்நிலையம் அக்கினி பகவானுக்கு அபிஷேகம்.

7.1983 கறுத்த யூலைக் கலவரமும் வெலிக்கடையில் பட்டப்பகலில் பல ஊடகக் புகைப்பக்காறர் படம் எடுத்துக் கொண்டிருக்த்தக்கதாக குட்டிமணியின் கண்ணைத்தோண்டி கொன்றது.

8. பாரளுமன்றத்திலிருந்து தமிழ் பாராளுமன்ற அங்கத்தவர்களை வெளியேற்றிவிட்டு மீண்டும் தேர்தல் இல்லாமல் ஆட்சி செய்தது.

9. பிரேமதாசா காலத்தில் பாஸ்கரலிங்கமூடாக புலிகளுக்குக் காசு கொடுத்து அமிர்தலிங்கத்தை மாவை சேனாதிராசா ஒத்தாசை வழங்கக் கொல்லுவித்தது. கொலையாளிகளை அமிர்தலிங்கம் வீட்டிற்குக்  கூட்டிக்கொண்டு; போனவர் மாவை சேனாதிராசா ஆகும். பிரபாகரனை வெள்ளைக் கொடியோடு சரணடையும்படி இந்திய உளவுப்படைக்காகத் தூதுபோனவரும் மாவை சேனாதிராசாவாகும்.

10.. 2005 இல் சந்திரிக்கா குமாரத்துங்கா புதிய அரசியலமைப்பு மூலம் கொண்டுவந்த தீர்வைப் பாரளுமன்றத்திலேயே யூ.என்.பியோடு சேர்ந்து தமிழ் 

தேசியக் கூட்டணி எரித்து அந்தத் தீர்வு வராமற் செய்ததோடு அதற்கு மாற்றாக இன்றுவரை எதையும் செய்ய எத்தனிக்கவில்லை. அரசியலிலே பின் விளைவுகளை எண்ணிப் பார்க்கத் தெரியாதவர்களின் செயற்பாடுகளால் அவர்கள் பிரதிநிதித்துவம் செய்த மக்கள் இனங்கள் அழிந்ததுதான் வரலாறு. நையீரியாவில் எவ்வாறு பயாப்றா தேசிய 

இனம் அழிந்துபட்டதோ அவ்வாறே இலங்கை தமிழினமும் அழிந்துபடும் நாட்கள் வெகு தூரத்தில் இல்லை. இன்று சம்பந்தனும் சுமந்திரனும் செய்யும் பின்விளைவுகளை யோசியாத செயற்பாடுகளால் இரண்டொரு கிழமைகளில் தமிழ் மக்கள் படும் பாட்டைத் தமிழ் மக்கள் இரத்தக் கண்ணீர் விட்டுத் தரிசிப்பார்கள்.

11. 2015 இல் அரசியல் கைதிகளை விடுதலை செய்வேன் என்று சொல்லித் தமிழ்மக்களின் ஆதரவைப் பெற்றுவிட்டு மீண்டும் ஏமாற்றியது. இந்தப் பிரச்சனை முடிந்தபின்பும் கட்டாயம் யூ.என்பி மீண்டும் ஏமாற்றும். ஏனெனில் முதலாளிது;துவ ஜனநாயகத்தின் கீழ் தமிழ் மக்களுக்கு விடுதலையோ விமோசனமோ ஒருபொழுதும் கிடைக்கப் போவதில்லை. இக்கருத்தை எவராலும் சவால்விட முடியாது. 

70 வருடகால வரலாறு திருப்பித் திருப்பி அதைத்தானே நிரூபித்துள்ளது. குணிதத்தின் உய்தறிவு முறை விளங்கியவர்கள் இதை இலகுவில்கண்டு கொள்வர். 

தமிழ் தேசியக் கூட்டணியினர் அனுபவ மறுப்புவாதிகள். அவர்கள் அனுபவ மறுப்பிலிருந்து ஒருநாளும் திருந்தவே மாட்டர்ர்கள். அவர்களுக்குத் தமிழ் மக்களின் நலன்களை விட முதலாளித்துவ நலன்களும் ஏகாதிபத்திய நலன்களும் முக்கியமானது. அவர்கள் அரசியல் உச்சிக்கு உயர்த்தப்பட்டதே ஏகாதிபத்தியவாதிகளால். சாதாரண மக்களால் அதை அனுமானிக்க முடியாது. ஏனெனில் வளமான தமிழ் மொழியில் „சிங்கள ஏகாதிபத்தியம்' என்ற வழகாறே வழங்குவதால் உற்பத்தியும் வினியோகமும் நிதியும் குவிந்துள்ள மேற்குலக ஏகாதிபத்தியங்கள் அவர்களது காட்சிப் புலத்திற்கும் ஏதமில்லாக் காட்சிக்கும் அப்பாற்பட்ட சமாச்சாரங்கள்.

     மேற்சொன்னவைதான் யு.என்.பியின் ஜனநாயகப்பட்டியல்.

     „நாம் பொது அறிவு மற்றும் வரலாறு பற்றிக் கேலி செய்யாவிட்டால், நாம் 'தூய ஜனநாயகம்' பற்றி பேச முடியாது என்பது தெளிவு. நாம் வாழும் சமுதாயத்தில் வௌ;வேறு வர்க்கங்கள் இருக்கும் வiர் நாம் வர்க்க ஜனநாயகத்தைப் பற்றி மட்டுமே பேச முடியும்.

-'தூய ஜனநாயகம்' என்பது ஓர் அறியாமைச் சொற்றொடர் மட்டும் அல்ல-வர்க்கப் போராட்டம் மற்றும் அரசின் இயல்பு ஆகிய இரண்டையும்; புரிந்து கொள்ள முடியாத தன்மையை வெளிப்படுத்துகிறது. ஆனால் அது மும்மடங்கு வெற்றுச் சொற்றொடர். 

ஏனெனில் கம்யூனிச சமுதாயத்தில் ஜனநாயகம் மாறிக்கொண்டே போகும் நிகழ்வுபு; போக்கை உடையது. அந்த சமுதாயம் அந்த மாறும் பழக்க வழக்கங்களுக்கு வந்து விடும். ஆனால் அது ஒருபோதும் 'தூய்மையான' ஜனநாயகமாக வராது. 'தூய ஜனநாயகம்' 

என்பது ஒரு உண்மையற்ற சொற்தொடர். இது தாராளவாதிகளால் தொழிலாளர்களை முட்டாளாக்கப் பயன் படுத்தப்படுகிறது. நிலப்பிரபுத்துவத்தின் இடத்தை எப்படி முதலாளித்துவ ஜனநாயகம் பறித்தது வரலாற்றுக்குத் தெரியும். அதேபோல் பாட்டாளி வர்க்க ஜனநாயகம், முதலாளித்துவ ஜனநாயகத்தின் இடத்தைக் கைப்பற்றும்.

     முதலாளித்துவ பாராளுமன்றத்தை எடுத்துக் கொள்ளுங்கள். முதலாளித்துவ ஜனநாயகம் எவ்வளவுக் கெவ்வளவு அபிவிருத்தி செய்யப்படுகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு பங்குப் பரிவர்த்தனையாலும் வங்கியாளர்களாலும் மேலும் கட்டுப்படுத்;தப் படுகின்றன என்பதைப் பற்றி கற்றறிந்த கவுத்ஸ்கி ஒருபோதும்; 

கேள்விப்பட்டதில்லையோ? இது முதலாளித்துவ பாராளுமன்றத்தை நாம் பயன்படுத்தக்கூடாது என்று அர்த்தப்படுத்தாது. ஆனால் ஒரு தாராளவாதி மட்டுமே முதலாளித்துவ பாராளுமன்ற முறைமையின் வரலாற்று வரம்புகளையும் மற்றும் வழக்கமான இயல்புகளையும் கவுட்ஸ்கி மறந்தது போல மறந்துவிட முடியும் என்பதே இதன் அர்த்தமாகும். மிகவும் வளர்ச்சியடைந்த ஜனநாயக முதலாளித்துவ அரசில் கூட அதன் வளர்ச்சியின்- ஒவ்வொரு காலகட்டத்திலும் பாட்டாளி வர்க்கத்தை ஊதிய-அடிமைகளாக மாற்றுகிற அந்த 'ஜனநாயகம்' பிரகடனப்படுத்திய முறையான சமத்துவத்திற்கு இடையில் ஆயிரக்கணக்கான உண்மையான வரம்புகள் மற்றும் ஏமாற்று வித்தைகள் இருப்பதால் ஒடுக்கப்பட்ட மக்கள் பயங்கர முரண்பாட்டை எதிர்கொள்கின்றனர். முதலாளித்துவத்தின் இந்த ஸ்தூலமான முரண்பாடுகள் அது அழுகிப்போனதை, அதன் பொய்வேசத்தைக் அதன் கபடத்தனத்தைப் பார்க்க மக்களின் கண்களை திறக்கிறது. இந்த முரண்பாடுகளை சோசலிசத்தின் கிளர்ச்சியாளர்கள் மற்றும் பிரச்சாரகர்கள் தொடர்ந்து அம்பலப்படுத்துவதன் மூலம் மக்களைப் புரட்சிக்குத் தயாரிக்கின்னர்.'

           -லெனின்-

இன்றய பாராளுமன்றத்திலே நடந்து முடிந்து அநாகரீகச் சண்டைகள் இலங்கை மக்களின் கண்களைத் திறந்து விட்டன. பூட்டிய சிந்தனைக் கூட்டின் இருப்புக் கதவுகளை உடைத்தெறிந்தன. வரப்போகும் தேர்தற்காலத்தில் அது மேலும் ஓர் அரசியற் சுனாமியாகப் பரிணாமம் அடையும். ஜனநாயகத்தைக் காப்பாற்ற சோஷலிசத்தின் வளர்ச்சி அத்தியாவசியம் என்பதை மீண்டும் உணர வைக்கும்.