Mar 19

'வெளிநாட்டில் நாங்கள் 2017'; கனடா வருகிறது ஜே.வி.பி

"வெளிநாட்டில் நாங்கள் 2017' எனும் அமைப்பு ஏற்பாடு செய்திருக்கும் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக எதிர்வரும் 26 ஆம் திகதி மக்கள் விடுதலை முன்னணியின் ஐவர் கொண்ட குழு கனடாவுக்கு வருகிறது

கனடாவின் டொரண்டோ நகரில் நடைபெறவுள்ள இம்மாநாட்டில்  மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற  உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி மற்றும் அக்கட்சியின் மத்திய நிறைவேற்றுக் குழு உறுப்பினர் ராமலிங்கம் சந்திரசேகரன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

10 நாட்கள் கனடாவில் தங்கியிருக்கும் இவர்கள் பல்வேறு தரப்பினரையும் சந்திக்கவுள்ளனர். கனடாவில் வாழும் இலங்கையர்களையும் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளனர்