Dec 06

தேர்தலின் பின்னர் முதல் தடவையாக கூடுகின்றது ரொறன்ரோ மாநகரசபை!

ரொறன்ரோ மாநகரசபை தேர்தலின் பின்னர் குறைந்த மாநகரசபை உறுப்பினர்கள் எண்ணிக்கையுடன் (புதன்கிழமை) முதல் தடவையாக கூடவுள்ளது.

ஒன்ராறியோ முதல்வர் டக் ஃபோர்ட் மாநகரசபை உறுப்பினர்கள் எண்ணிக்கையை குறைப்பதற்கான நடவடிக்கை எடுத்ததன் பின்னர், 45 ஆக இருந்த ரொறன்ரோ மாநகரசபை உறுப்பினர்களின் எண்ணிக்கை 25 ஆக குறைக்கப்ப்டடது.

அதனைத் தொடர்ந்து அண்மையில் ரொறன்ரோ மாநகரசபைத் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், மேஜராக மீண்டும் ஜோன் ரொறி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் புதிய மாநகரசபையின் முதல் அமர்வு, குறைக்கப்பட்ட எண்ணிக்கையான உறுப்பினர்களுடன் இன்று முதன் முறையாக கூடவுள்ளது.

அந்த வகையில் இன்று பிற்பகல் இரண்டு மணிக்கு ஆரம்பமாகவுள்ள மாநகரசபை அமர்வில், மேயர் ஜோன் ரொறி, ஏற்கனவே மாநகசரபை உறுப்பினர்களாக இருந்து மீண்டும் தெரிவான 22 பேர், புதிதாக தெரிவான 3 பேர் என மொத்தம் 25 நகரமன்ற உறுப்பினர்கள் கூடவுள்ளனர்.