Mar 19

மஹிந்தவின் வாக்குறுதியை பிரதமர் நிறைவேற்றுகிறார்; அமைச்சர் கிரியெல்ல

தமிழ் மக்களின் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு 13ஆவது திருத்தத்திற்கும் அப்பால் செல்வதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வழங்கிய பொய் வாக்குறுதியை இன்று மெய்ப்படுத்தும் நடவடிக்கையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஈடுபட்டு வருவதாக சபை முதல்வரும், பெருந்தெருக்கள் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

கண்டி கம்பொல வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான புதிதாக அமைக்கப்பட்ட தொழில்நுட்ப ஆய்வுகூடத்தை திறந்து வைக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட குறிப்பிடுகையில் பொதுமக்கள் கருத்துக் கணிப்பிற்குச் செல்லாத எந்தவொரு அரசியலமைப்பிலும் பயனில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.