Dec 06

சிறீலங்கா ஜனநாயகம் பாசிசத்தை நோக்கிப் பயணிக்கிறது.

இலங்கையின் அரசாங்கம் இந்தாபிடி பாசிசம் ஆகிறது. இத்தாலி எப்படிப் பாசிசமாக உருமாறியதோ அதே பாதையையே சிறிலங்கா அரசாங்கம் பின்பற்றுகிறது. இத்தாலியில் பாசிச இயக்கம் முதலாம் உலகப் போரின் விளைவாய் தோன்றயது. இலங்கை அரசும் தமிழின அழிப்புப் போரின் பலாபலனின் பகற்கொள்ளையில் படாடோபிக்கிறது. 

  யுத்தத்தின் போது இராணுவத்தில் பணியாற்றியவர்களில் பெரும்பான்மையினர் யுத்தத்தின் முடிவில் இராணுவ வேலையிலிருந்து தெருவில் கறிக்குப் போட்ட கருவேப்பிலை போல வீசப்பட்டனர். ஷஷஅதைக் கறைபிஞ்சா,, தத்துவமென்று சிங்கள மரபு மொழியிற் கூறுவர். இந்த வர்க்கப் பிரஷ்டம் செய்யப்பட்ட பெருந்தொகையினரே எப்பெழுதும் பாசிசத்தின் அத்திவாரமாகும். இந்த மூலங்கள் முதலில் சம்பிரதாயமாக முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டமென்ற ஒரு திட்டத்துடன் அரச எதிர்ப்பைக் காட்டினார்கள். பெப்ரவரியில் உள்ளுராட்சித் தேர்தலில்  அதன்வெளிப்பாடே பொதுசன மக்கள் முன்னணியின் அமோக வெற்றிக்குப் பின்னாலுள்ள இரகசியமாகும். போரின் இலாபங்களை தாமும் பகிர்ந்து கொள்ள அவர்கள் விரும்பினர். கடைசியாக அக்டோபர் 26, 2018 அவர்கள் எதிர்பார்த்த வாய்புக் கிட்டியது. தங்கள் பலத்தையும் கோரிக்கையையும் எதிர்ப்பு ஆhப்பாட்டங்கள் மூலம் காட்டினார்கள்.

ஸ்ரீPலங்காவில், முதலாளித்துவ ஜனநாயக சோசலிச குடியரசு   அரசாங்கத்திற்கு எதிராக பாசிசம் சம்பிரதாயபூர்வமாக அபிவிருத்தியடையவில்லை.

 முதலாளித்துவ ஜனநாயகம் அதாவது முதலாளித்துவ ஜனநாயகத்தின் தர்க்கரீதியான வளர்ச்சியைப் போல இங்கே இது தோன்றுகிறது. 'முதலாளித்துவ ஜனநாயகத்தின் அபிவிருத்தியை ஒரு தலைகீழ் முதலாளித்துவ சர்வாதிகாரமாக அபிவிருத்தி செய்துவைத்திருக்கிறது. அதன் நிறைவேற்று அதிகாரச் சட்டங்கள் பொனப்பாட்டிச சர்வாதிகார்திற்கு அப்பால் ஆனால் பாசிசத்திற்குச் சிறிதே குறைந்த நிலையில் உள்ளதாக அது அபிவிருத்தி கண்டு;ளது. இறங்கு நிலையில் பாகிஸ்தானைப் போலப் பாசிசத்திலிருந்து பொனபாட்டிசத்திற்கு இறங்கி வந்ததிலும் பார்க்க இது ஏறுநிலையில் பொனப்பாட்டிச சர்வாதிகரத்திலிருந்து பாசிசமாகப் பாய்ச்சலெடுத்துள்ளதால் இது கொடூரமானது.

    முதலாளித்துவ ஜனநாயகத்தைப் பொறுத்தவரை பாசாங்குக்காவது   அரசியல் சமத்துவம் இருப்பது போன்ற தோற்றத்தையாவது வெகுசனங்களுக்குக் காட்டுவது அவசியமாகும்.

 முதலாளித்துவ அரசாங்கம் பற்றி இப்படியான பிரமைகள் வேரூன்றி இருந்தால் மாத்திரம்தான் வெகுசங்கள் முதலாளித்துவ அரசாங்கத்தைச் சகித்துச் சம்மதிப்பார்கள்.  சிறீலங்கா முதலாளித்துவ ஜனநாயகத்தின் கொள்கையானது உற்பத்தி முறையின் தனியார் சொத்துடமையாக இருந்த போதும் மேற்சொன்ன

 இந்த 'ஜனநாயக' வடிவங்களின் காரணமாக, மக்கள் தமது அரசியல் சம்மதமின்மையின் அடிப்படையில் இலங்கை முதலாளித்துவத்தின் அடிப்படையை பார்க்கவில்லை. 

 தனியார் சொத்துக்களின் அடிப்படை எல்லைகளை மீறி எந்தவொரு அரசியல் கொள்கையானாலும் அது ஒரு அரசியல் உரிமையின்   கருத்தாகக் கருதப்படாது. ஆனால் அது பெரிய தேசத்துரோகமாக கருதப்படும். அது ஜனநாயகத்திற்கு எதிரான துரோகமாகும். முதலாளித்துவத்திற்கு எதிரான துரோகமாகும். எனவே முதலாளித்துவம் அரசியல் உரிமைகளை;, வாக்குரிமைகள், முதலியவற்றை வழங்குவதால் மட்டுமே இந்த உரிமைகள் முதலாளித்துவத்தின் சமூக வடிவமைப்பிற்குள் நடைமுறையில் இருந்தால் மட்டுமே மதிக்கப்படுகின்றன. அவை முதலாளித்துவ வர்க்கத்தின் மேலாதிக்கத்தையும், முதலாளித்துவ வர்க்கத்தின் ஆட்சியின் அங்கீகாரத்தையும் அங்கீகரிக்கும் வரை மட்டுமே ஏற்றுக்கொள்ளப் படுகின்றன.     

    பேச்சுச் சுதந்திரம், பத்திரிகைச் சுதந்திரம,; கூட்டங்கூடும் சுதந்திரம் சர்வசனவாக்குரிமை, போன்றவை முதலாளித்துவத்தின் நிபந்தனையற்ற ஆதரவை சார்ந்துள்ளன. இந்த 'உரிமைகள்' முதலாளித்துவத்திற்கு ஒரு சவாலாக எடுத்துக் கொள்ளப்பட்டால்;, அவைகளின் பிரயோகங்கள் கிறிமினல் குற்றங்களாக மாறி விடுகின்றன.

அவை சட்டவிரோதக் கூட்டங்கூடுதல், கிழர்சிக்கான தூண்டுதல், தேசத்துரோகச் செயல்; போன்றவை என்று முதலாளித்துவம் அடையாளப்படுத்திவிடும். எங்கெங்கெல்லாம் அரசியல் ஷஷஉரிமைகளைப்,, பாவிப்பது முதலாளித்துவத்திற்குச் சவாலாக அமைந்துவிடுகின்றதோ அங்கங்கெல்லாம் 'மக்களின்' அரசாங்கம் அவைகளை மக்களுக்கு எதிரான பழிவாங்கும் செயலாகச் செய்துவிடும்.;. ஆளும் வர்க்கத்தின் சிந்தனைகள் பேச்சுக்கள் செயல்களெல்லாம் இந்தத்தோறணையில் அமைந்துவிடும்.

    இந்த உண்மைகள் மக்களுக்கு வெளிப்படையாகத் தெரியாதபடி ஜனநாயக வடிவங்கள் தடுக்கின்றன. இந்த உண்மைகள் வெகுஜனங்களுக்குத் தெரியாத வரைக்கும், ஜனநாயக வடிவங்களை அசைக்க முடியாது. எவ்வாறெனினும், நிலைமை மாறுகிறது. வர்க்க உறவுகளின் மாற்றம் கூர்மையடைவதானது மக்களுக்கு கண் திறப்பாளராக செயல்படுகிறது. அத்தகைய ஒரு மாற்றம் இப்போது இலங்கையில் சாட்சியமளிக்கின்றது.

பொருளாதார நெருக்கடி மக்களை மேலும்மேலும் அழுத்தி வருகிறது. குறிப்பாகச் சர்வதேச நாணநிதியத்தின் அழுத்தத்தால் எற்பட்ட சிக்கன நடவடிக்கை வெகுசனங்களைக் கண்டு கேட்டிராத மட்டத்திற்கு நசுக்குகின்றது. இது அரசியல் கோரிக்கைகளைக் கோருவதற்கு அவர்களைத் தூண்டுகிறது. அவர்கள் தப்பிப் பிழைப்பதற்கான பொருளாதார முன்நிபந்தனைகளே கோரிக்கைகளாக வடிவெடுக்கின்றன. ஆயினும், முதலாளித்துவம் இந்த கோரிக்கைகளை வழங்கவிரும்புவதுமில்லை அதற்கு வழங்க இயல்வதுமில்லை.

விவேகமானவிஞ்ஞானமுறையில் உற்பத்தி செய்தல், வேகமாக உற்பத்தி செய்தல், இயந்திரமயமாக்குதல் போன்றவை உற்பத்தியிற் பங்குகொள்வதிலிரந்து பெரிய எண்ணிக்கையிலான தொழிலாளர்களை வேலையிலிருந்து நீக்குகிறது. இந்த தொழிலாளர்கள் வாழ்வாதாரம் அவர்களது வேலைகளில் தங்கியிருப்பதால், இந்த அபிவிருத்தி அவர்களது பரிபூரணமாகத் தவிர்க்கமுடியயாத  வருவாயை இரக்கமின்றிச்  சூறையாடுகிறது. முதலாளித்துவத்தால் அதை மாற்ற முடியாது. முதலாளித்தவத்தின் பணி தொழிலாளர்களுக்கு வேலைகளை வழங்குவதல்ல, ஆனால் இந்த அற்ப சொற்ப தொழிலாளர்களிடமிருந்து முடிந்தவரை உபரி உழைப்பை அதாவது லாபத்தைக் கறப்பதுதான். முதலாளித்துவத்தின் 'மிகவும் சக்திவாய்ந்த கடவுள்- இலாபமாகும். ஆதலால் முதலாளித்துவத்தின் முழு இலக்கும் லட்சியமும் நன்நெறியும் லாபம்தான்.

அதனால்தான் வேலையின்மை நிவாரணத்திற்கான அடிப்படைக் கோரிக்கை என்பது முதலாளித்துவ ஜனநாயகத்தைப் பொறுத்த வரையில் முதலாளித்துவத்தின் மீதான தாக்குதலாகக் கருதப்படுகின்றன. தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பளக் கோரிக்கை அநியாயக் கோரிக்கையாகக் கருதப் படுகிறது. இலங்கைத்தமிழரின் இணையத்தளங்கள் அதைப் பவ்வியமாக அசட்டை செய்து விடுகின்றன. அதனால்தான் வேலையில்லாதோரது வேலை கோரும் ஆர்ப்பாட்டங்கள் கண்ணீர்ப்புகை குண்டுகள், இயந்திர துப்பாக்கிகள் மற்றும் சிறைச்சாலை தண்டனைகளைச் சந்தித்த வண்ணமே இருக்கின்றன. ஆதலாலே  பொருளாதார நெருக்கடிகள் வெகுஜனங்களின் ஜனரஞ்சகமான ஜனநாயகப் பிரமைகளின் வேர்களைக் கறையான் அரிப்பது போல் அரித்துவிடுகின்றன. அதனால்தான் உண்மையான தொழிலாள வர்க்க அமைப்பு மற்றும் போராட்டத்தின் ஒவ்வொரு வடிவமும் இன்று முதலாளித்துவத்திற்கு ஒரு சாத்தியமான சவால் ஆகும். அதனால்தான் கம்யூனிஸ்டுகளின் ஒரு மிக தீவிரமான புரட்சிகர நடவடிக்கை இந்த நேரத்தில் மிகவும் முக்கியமானது.

    இதுதான் இன்றைய முதலாளித்துவ சர்வாதிகாரத்தின் ஜனநாயக வடிவங்கள், இன்றைய முதலாளித்துவ ஸ்ரீலங்காவின் ஜனநாயக வடிவத்தை ஏறத்தாள இழந்துவிட்டது. ஆளும் வர்க்கம் இன்னும் கூடுதலான முறையில் தனது அரசியல் சர்வாதிகாரத்தை வேறு விதமாக பயன்படுத்த அதாவது பலாத்காரத்தைப் பாவிக்க நிர்பந்திக்கப்படுகின்றது. இதன் விளைவாக, முதலாளித்துவ ஆட்சியின் வடிவங்களில் தீவிர மாற்றங்கள் நடைபெறுகிறது. இன்றய இலங்கைப் பாராளுமன்றம் காடைக் கோஷ்டிகளின் கண்டர்மிண்டிக் களியாட்டமானதன்; புறநிலைக் காரணம் இதுதான்.    

     இந்த மாற்றம் உலகளாவிய ரீதியில் கண்டுகொள்ளப்படாமைக்கான முக்கிய காரணம் அதன் சீரான படிப்படியான மாற்றமாகும். இலங்கை முதலாளித்துவ அரசாங்கம்; பாசிசமாகியது ஒரு நிகழ்வுப் போக்காகும். ஓரு நிகழ்வுப் போக்கென்பது ஆயிரம் லட்சம் காரணிகளின் ஒன்று கூடலின் விளைவாகும். 

    ஸ்ரீலங்கா அரசியலில் ஊழல் எதுவும் புதுமையே இல்லை. எத்தனை தொகை புத்தகம் வேண்டுமானாலும் எழுதித்தள்ளலாம். ஸ்ரீலங்கா ஜனநாயகமும் ஊழலும் ஒரே பொருளுடைய இணைச் சொற்கள். இரண்டுமே ஒட்டிப் பிறந்து இரட்டைக் குழந்தைகள். ஊழல் என்பது ஸ்ரீலங்கன் ஜனநாயகத்தின் ஒரு பக்க உற்பத்திப் பொருள். இது ஸ்ரீலங்காவுக்குமட்டுமான நூதனப் பொருளல்ல. இது பொதுவாக முதலாளித்துவத்தின் தவிர்க்கமுடியாத உற்பத்திப் பொருள். செப்டம்பர் 4, 1852 அன்று நியூயோர்க் ட்ரிபியூனுக்கு எழுதிய  கட்டுரையில் பிரிட்டிஷ் தேர்தல்களில் ஊழலைப் பற்றி  கார்ல் மார்க்ஸ் பின்வருமாறு எழுதுகிறார்:

பிரிட்டிஷ் தேர்தல்களில்  ஊழல் வழக்கமானது. பிரிட்டிஸ் தேர்தல் ஊழலைத்தவிர வேறு எதுவாக இருந்தது. போட்டி போட்ட கட்சிகள் பிரபலமான மிருகத்தனத்தையே வெளிப் படுத்தினார்கள். அவர்களின் செல்வாக்கின் அளவைப் பொறுத்து அவர்கள் ஒரு சில நாட்களுக்கு அசாதாரணமான நக்கல் நையாண்டி கிண்டல் வடிவத்தைப்  பயன்படுத்தினார்கள்.

இந்த கட்டுரையில் மார்க்சும் தொழிற்துறை முதலாளித்துவம் ஒரு வர்க்கமாக வருகை தந்து நவீன சமுதாயத்தின் மேலாதிக்கத்தை அது ஆர்வத்தோடு பிரதிநிதித்துவம் செய்ததையும் அங்கே ஒரு மாற்றம் ஏற்பட்தையும் சுட்டிக் காட்டினார். சமுதாயத்தின் மேலாதிக்க நலன்களை பிரதிநிதித்துவப்படுத்துவதன் அடிப்படையில் வாக்காளர்களுக்கு முறையிடும் வகையில் இந்த வர்க்கம் வலுவாக உணர்கிறது. எனவே, அது ஊழலுக்கு எதிரான குரலை எழுப்பியதேர்டு; அது 'தூய்மையான தேர்தல்' லுக்காகப் போராடியதுமாகும். ஆனால் இங்கே ஊழல் முடிவுக்கு வரவில்லை என்று மார்க்ஸ் வலியுறுத்தியுள்ளார். ஊழல் வெறுமனே 'மிகவும் நாகரீகமான மற்றும் மறைந்த வடிவங்களை எடுத்துக்கொண்டது. ஏன்று எழுதியுள்ளார். 

  இல்ஙகைப் பாராளுமன்றத்தில் ஒரு விதிவிலக்காக இருந்த ஊழலை இப்பொழுது ஒரு விதியாக மாற்றிவிட்ட தால் அது ஊழல் என்ற அர்த்தத்தை இழந்து அது ஒரு முறையான வழமை ஆகிவிட்டது.

    தற்போது, இலங்கையில் முதலாளித்துவ ஊழல் ஒரு வல்லமைமிக்க மோசமான அரசியல் அறம் ஆகிவிட்டது.  ஊழலின் அளவு ஜனநாயகத்தின் தரத்தை தீர்மானிக்கிறது. ஜனநாயகம் ஊழல் எண்ணிக்கையின் நேரடியான விகிதாசாரமாக உள்ளது. எவ்வளவுக்கு எவ்வளவு ஊழல் அதிகரிக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு ஜனநாயகமும் அதிகரிக்கிறது.

ஒழுங்கமைக்கப்பட்ட பாதாள உலகக்கோஷ்டிகளின் செயற்பாடுகள் என்ற உணவை உண்டு ஜனநாயகம் கொழுத்து இலங்கையின் அரச இயந்திரத்தின் ஒரு பகுதியாக மாறியுள்ளது. 

    ஒழுங்குபடுத்தப்பட்ட பாதாள உலகில் உள்ள ஊழல் தடுப்புச் சடங்குகளை உண்பதற்கும், உண்ணாவிரதமிருப்பதற்கும், இலங்கையில் அரசாங்க இயந்திரத்தின் ஒரு பகுதியாக மாறியுள்ளது. இலங்கைப்பாராளுமன்றம் ஊழலை உற்பத்திசெய்யும் சதுப்பு நிலமாக எப்பவோமாறிவிட்டது.

1964 இடதுசாரிக் கூட்டரசாங்கத்தின் மீது நம்பிக்கை இல்லாப் பிரேரணையை நிறைவேற்ற தமிழருகட்சி லேக்கவுசால் விலைக்குவாங்கப் பட்டது. இலங்கையின் முதலாளித்துவ அரசாங்கத்தின் வளர்ந்து வரும் பாசிச போக்கால், பாதாளக்கோஷ்டிகளின் செயற்பாடுகளும் முற்றிலும் மாறிவிட்டது. கடந்த காலத்தில் ஊழல் நிறைந்த தனிநபர் முதலாளித்துவ அதிகாரிகளால் பாதாளக் கோஷ்டிகள் பராமரிக்கப்பட்டு வந்தது. ஆனால் இப்போது இந்த பாதாளக் கோஷ்டிகள்; அதிகாரத்தின் ஒரு பாகமாக மாறிவிட்டது. இந்தப் பாதாளக் கோஷ்டிகளே இலங்கை முதலாளித்துவ அரசாங்கத்தை பராமரிக்கிறது.

ஆரம்பகால ஊழல் இலங்கை முதலாளித்துவத்தின் வேகமான வளர்ச்சியின் விளைவாக இருந்தது. இன்றைய ஊழல், முதலாளித்துவத்தின் சீரழிவின் வளர்ச்சியின் அடையாளம் ஆகும். இளம், தீவிரமான முதலாளித்துவம் அதன் ஊழல் மலிந்தபோதும் வெகுஜனங்களிடையே தனக்கிருந்த செல்வாக்கை இதுநாள்வரையும்; காப்பாற்றிக் கொண்டது. இப்போது, அழுகிய முதலாளித்துவம், தன்னை ஊழல் மூலம் முன்புபோல் ஓரளவுகூடக் காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்த உண்மைகளின் அரசியல் முடிவுகள் பரந்தளவில் அரசியல் துன்புறத்தல்களாகும். இலங்கையின் முதலாளித்துவ அரசின் பிரச்சாரக்கிளர்ச்சியையும் சட்டபூர்வமான இயந்திரங்களும் குறைந்து வருகின்றன. அவர்கள் சாதாரணமாகக் குற்றங்களைக் கட்டுப்படுத்துவதிலில் கவனம் செலுத்துகிறார்கள். இந்தக் குற்றவாழிகள் என்பவர்கள் யாரென்றால் ஆர்ப்பாட்டக்காரர்கள், தெருக்வில் பிரச்சாரம் செய்பவர்கள்;, தொழிலாளர் அமைப்பாளர்கள், மாணவர் இயக்கங்கள், விவசாயிகள் அமைப்புகள், மீனவர்கள் அமைப்புகள், ஒடுக்கப்பட்டதேசிய இனங்கள், பெண்கள் அமைப்புகள், வேலையில்லாத இளைஞர்கள்;, வீடற்ற மக்கள் சிறபான்மை மதத்தவர் போன்றோர். இவர்களைப் பழிவாங்குவது பெருகிக்கொண்டே போகின்றன.

அரச வளக்கறிஞர்கள், நீதிபதிகள், பாரளமன்ற ஆசனங்கள், நிரந்தரச் செயலாளர்கள்;, அரச தூதர்கள் என்போர் தங்கள் உத்தியோகங்களை ஊழல்கள்மூலம் விலைக்கு வாங்கியவர்கள் ஆவார்கள். விலைபோன நீதிபதிகள் அலுவலகங்களில் அரசியல்வாதிகளால் பாதுகாத்துப் பராமரிக்கப் படுகிறார்கள். உள்ளூராட்சித் தலைவர்கள் ஊழல் பெருச்சாளிகளாக உள்ளனர். சுhதாரண அப்பாவிப் பிரஜைகள் பொய்வழக்குள் சோடனை வழக்குகளால் சிறைகளில் நிரம்பி வழிகிறார்கள்.

ஆயுதப் படைகள் எழுந்தமானத்தில் இளைஞர்களைப் பிடித்து அடைத்து லஞ்சம் கறந்தபின் விடுதலையாவது என்பது நாளாந்த நிகழ்சி. உச்சியில் உள்ள படை அதிகாரிகள் எல்லோரும் யுத்தகாலக் கோடீஸ்வரரானவர்கள் தங்களது அந்தஸ்தைப் பராமரிக்கும் வாருவாய்களை குற்றமற்ற இளைஞர்களை கைதியாக்கி லஞ்சம் கறப்பது நாளந்த வழக்கமாகி விட்டது. இலங்கையின் பெரும்பாலான பிரையைகள் வழக்கமான கட்சிகளுக்கு வாக்களித்து வாழத்தெரியாத ஏழைகளாகிக் கோண்டே போகிறார்கள். பொய்வழக்குகளின்மூலமும் சதித்திட்டங்களின் மூலமும் தொழிலாளர்களும் இளைஞர் யுவதிகளும் தூக்கு மேடைக்கு அனுப்பப் படுவது சகஜமாகி விட்டது. சதி இப்பொழுது இலங்கைப் பாராளுமன்றத்தினுள்ளும் வந்து விட்டது. இலங்கை ஜனாபதியும் உள்வீட்டு இரத்தம் சிந்தாச் சதியின் கழிவுப் பொருள்.

ஆங்கிலம்பேசத் தெரிந்த அரசியல் ஒட்டுண்ணிகள் ஏகாதிபத்திய விசுவாசம் என்ற நற்சாட்சிப் பத்திரத்தால் விடிந்பொழுதுபடுவதற்குள் அரசியற்தலைவர்கள் ஆகிவிடுகிறார்கள். அமெரிக்க சர்வதேச வலைப்பின்னலின் கண்ணிகள்தான் அரச சார்பில்லா அயோக்கியர்கள். றோ உளவுப்படை பாக்குத் தொடுவாய் தண்ணீருக்குள்ளால் நெருப்பைக் கொண்டுவந்து கொட்டி பற்ற வைத்தக்கொண்டே இருக்கிறார்கள். யுத்தம் நடந்த பிரதேசங்களில பொதுசனக் காணிகள் சூறையாடப்பட்டுக்கொண்டே போகின்றன.

அப்பாவிகள் சிறையிலே இருக்கிறார், மேலும் மோசமானவர்கள் சிறைக் காவலர்களாக இருக்கிறார்கள். காடையர்கள் பாராளுமன்றவாதிகளாக இருக்கிறார்கள். கொலைகள் விரைவாக அதிகரித்து வருகின்றன. தற்கொலைகள் பெருகிக் கொண்ட வருகின்றன. கடன்சுமையைத்தாங்காத விவசாயிகள் தற்கொலைக்கு எண்ணுக் கணக்கே இல்லை.

போதைப்பொருளும் கடவுச் சீட்டும் பூக்கடைகளிலும் பெட்டிக்கடைகளிலும் விற்கப் படுகின்றன. கள்ள நோட்டுக்கு அளவே இல்லை. ஆனால் முதலாளித்துவ நீதிபதிகள் கொலைகாரர்களுக்கு முன் இரு கண்களையும்; மூடிவிடுகிறார்கள். இந்தக் குற்றவாளிகளின்கூட்டாளிகள் நீதிபதிகள் ஆக இருக்கிறார்கள். மத்திய வங்கி முகாமையாளர் மகேந்திராவும் பிரதம மந்திரி றணில்விக்கிரம சிங்காவும் பிணைப் பத்திரக் கள்ளர்களானது ஊரறிந்த கதை. சாமுத்திரிகா வங்கிக் காசைக் கொள்ளையடித்துவிட்டு வங்குறோட்டாக்கி விட்டது பெரிய துப்பறியம் நாவல்.

    முதலாளித்துவ ஜனநாயகம் பாசிசமாக மாறுவது என்பது அதன் அனைத்து ஆடம்பரங்களையும், போலி நகைகளையும் அகற்றும் நடவடிக்கையாகும். குறிப்பாக தேர்தல் பிரச்சாரத்தின்போது  தொழிலாளவர்க்க கட்சியின் முக்கிய கடமை இந்தப் பாசிமாற்றத்திற்கு எதிராக தொழிலாளர்கள் வெகுஜனங்களை அணிதிரட்டுவதாகும். 

    பாசிசம் இலங்கைமுதலாளித்துவ அமைப்பின் 30 வருட ஒடுக்கப்பட்ட தமிழ் தேசியஇனத்திற்கு எதிரான போருக்குப் பிந்தைய நெருக்கடியின் விளைபொருளாகும்.

    லெனின் சொன்னார்:

முதலாளித்துவ சமுதாயத்தில், அபிவிருத்திக்கான மிகவும் சாதகமான சூழ்நிலைகளில், ஜனநாயக குடியரசில் நாம் ஏறக்குறைய முழுமையான ஜனநாயகத்தை அனுபவித்தோம். ஆனால் இந்த ஜனநாயகம் எப்பொழுதும் முதலாளித்துவ சுரண்டலின் குறுகிய கட்டமைப்பால் மட்டுப்படுத்தப்படுகிறது, எனவே எப்போதும் மிஞ்சி இருப்பது உண்மையில் ஒரு சிறுபான்மையினருக்கான ஜனநாயகம் மட்டுமே அதாவது சொத்துடமை வர்க்கங்களுக்கும் செல்வந்தர்களுக்கும் ஆன சிறுபான்மையினருக்கும்  மட்டுமே. ஒரு முதலாளித்துவ சமுதாயத்தில்; சுதந்திரம் என்பது எப்பொழுதும் பழம்பெரும் கிரேக்க குடியரசின் தன்மையைப் போலவே இருக்கும்: அடிமை உரிமையாளர்களுக்கு இருந்த ஒரு சுதந்திரம்போன்றது.

முதலாளித்துவ சுரண்டலின் நிலைமைகளுக்குள் வாழும் கூலிவேலை செய்து பிளைக்கும் நவீன அடிமைகளுக்குத் தேவைப் பொருட்கள் கிடைகாமையாலும் மற்றும் துன்பங்களினாலும் மிகவும் நசுக்கப்பட்டதால் அவர்களுக்கு ஜனநாயகத்திலும், அரசியலிலும்; ஏன் எந்த சாதாரண, அமைதியான, நிகழ்வுகளிலுங்கூட எந்தவிதமான அக்கறையும் இல்லை.  பெரும்பான்மையான மக்கள் சமூக மற்றும் அரசியல் வாழ்வில் பங்கேற்பதி ல்லை.-லெனின்- பாகம-;21. 

 ஒரு மிகச் சிறுபான்மையினருக்கான ஜனநாயகம், பணக்காரர்களுக்கான ஜனநாயகம்,-இதுதான் முதலாளித்துவ சமுதாயத்தின் ஜனநாயகமாகும்.

-மிகச் சுதந்திரமான மற்றும் மிகவும் ஜனநாயக குடியரசுகளிலுங்; கூட,-  அவர்களது மிகவும் வளர்ந்த வடிவத்திலுங் கூட-தொழிலாளர் இயக்கங்கள் பரந்துபட்ட 'சட்டபூர்வமான' உரிமைகளை அனுபவிக்கும்  நாடுகளிலுங் கூட -முதலாளித்துவ ஜனநாயகம் என்பது ஒரு போலி மாறுவேடம் மட்டுமே  

-அதன் ஜனநாயகம் என்பது உண்மையில் முதலாளித்துவ-ஜனநாயக அரசு   என்பதே -அது ஓர் உருவகம் மட்டுமே-மற்றும் வர்க்க ஆதிக்கத்தை இணைத்தல் மட்டுமே-அதாவது முதலாளித்துவ வர்க்கத்தின் வர்க்க சர்வாதிகாரத்தின் ஆட்சியே.

இலங்கை முதலாளித்துவத்தை காப்பாற்றுவதற்கு ஒரேயோரு வழிதான்;ருக்கிறது. முதலாளித்துவ வர்க்கம் பாசிசக் கட்சியைத்   ;தோற்றுவிக்க வேண்டும். இன்றய பாராளுமன்ற அமழிதுமழி பாசிசத்திற்கு ஒரு பாதையை அமைப்பதற்கான திட்டமிட்ட சதியாகும். றணில் விக்கிரம சிங்காவைத் தட்டி ராஜபக்ஸ்சவை பிரதமாராக நியமிக்கு முன்  பாரளுமன்றப் பெரும்பான்மையைப் பெறுவதற்கான இரகசிய இணக்கத்தின் பின்னரே கலைத்திருப்பார்கள்.

முதலில் இணங்கிய தமிழர் தேசியக்கூட்டணி முஸ்லீம் காங்கிரஸ் போன்றவையைப் பின்பு குத்துகரணம் அடிக்கப் பண்ணியே இந்தக் குழப்பத்தை உண்டாக்கினார்கள். இன்றய தமிழ் தேசிய கூட்டணியின் செயற்பாடுகளைப் பார்க்கும்பொழுது 30 வருடமாக ஏன் உள் நாட்டுயுத்தம் நடைபெற்றதையே நம்ப முடியவில்லை. 1976 புகையிலைக் கூட்டுத்தாபன வேலை நிறுத்தத்pன் போது மொழிவழித்தொழிற் சங்கத்தின் தலைவன் ஈழவேந்தன் சொன்னார் சிங்களவனும் சிங்களவனும் சண்டைப்படுகிறான் எமக்கென்ன வேலை. வேலை நிறுத்தத்தை உடைத்து கருங்காயாகினார்கள் தமிழர்கள்.

பின் வந்த மத்திய வங்கி வேலை நிறுத்தத்திலும் இதே சிங்களவனும் சிங்களவனும் சண்டைப் படுறான் எமக்கென்ன வேலை. பின்பு வந்த பிரபகரன் சிங்கள தேசம் பிளவு பட்டிருக்கிறது. தமிழீழமு; ஐக்கியமாக இருக்கிறது. இதுவே தமிழீழம் எடுக்க உகந்தது. வரலாற்றிலே தமிழரும் சிங்களவரும் இப்பொழுது ஒற்றுமையாக இருந்த மாதிரி ஒரு காலமும் இருந்ததில்லை. தமிழர் தேசியக் கூட்டணிக்குள் உட்கட்சி ஜனநாயகம் கிஞ்சித்தும் கிடையாது என்பதை ரெலோ கூட்டத்திலே செல்வம் அடைக்ல நாதனின் ஒப்பாரி உறுதிப் படுத்துகிறது.

15 பேர் கொண்ட தமிழர் தேசியக் கூட்டணிக்குள் உட்கட்சி ஜனநாயகத்தைக் கடைப்பிடிக்கத் தெரியாதவர்கள் இலங்கைப் பாராளுமன்றத்தை ஜனநாயகமாக மாற்றப் போகிறார்களாம். தமிழ் ஜனநாயக விரோதிகளும் சிங்கள ஜனநாயக விரோதிகளும் வெகு சீக்கிரம் பாசிசத்தைக் கொண்டுவருவார்கள. என்னமாதரி; மொறோக்கோவைப் பாசிசமாக்க வேண்டிய தேவை கிட்லருக்கு இருந்ததோ அதே மாதிரியே இலங்கையைப் பாசிசமாக்க வேண்டிய தேவை அழுகிக்கொண்டிருக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு இருக்கிறது. மசாசுசெற்பாராளு மன்றத்திலேதான் தமிழர்களுக்கு உரிமை கொடுக்க வேண்டும் என்ற பிரேரணை முதலில் நிறைவேறியது.

காத்து மழைக்குக்கூட அரசியல் செய்யாத, அரசியல் ஒட்டுண்ணிகளான சுமந்திரனும் ரத்தினஜீவன் கூலும் அரசியல் வானுக்கு வந்தது ஒன்றும் தற்செயலானதல்ல. வாசிங்டனிலே தனது இரகசிய ஸ்தாபனத்தை வைத்திருக்கிற பாக்கிய சோதி சரவண முத்து சிறிசேனாவைக் கொண்டு வருவதற்கு சிட்னியிலே கூட்டம் வைத்தார். கியுமன் றைற் வாச் என்ற அமைப்பின் தலைவர் அகிலன் கதிர்காமர் பி.பி.சீ பேட்டி கொடுப்பதும் இந்துப் பத்திரிகையில் எழுதுவதும் பாசிச இரகசியத் தயாரிப்பு களின் திட்மிட்ட நடவடிக்கையாகும்.

தமிழ் இளைஞர் இயக்கங்களை கொண்டுபோய் இந்திய உளவுப் படையிடம் சிறைப்படுத்திய செல்வனாயகத்தின் மகன் சந்திரகாசன் அடிக்கடி யாழ்பாணம்வாறது எல்லாம் தமிழர் கண்களிலே மண்ணைத் தூவுவதற்காக. என்னமாதிரி முதலாவது இடதுசாரிக்கூட்ரசாங்கம் லேக்கவுஸ்சைத் தேசிய மயமாக்கும் பிரச்சனையிலே பிரித்தானிய ஏகாதிபத்தியத்திடம் சலுகை பெற்று செல்வனாயகம் அமிர்தலிங்கம் உட்பட அன்றும் ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதென்ற தோறணையில் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு வாக்களித்து இடதுசாரி அரசாங்கத்தை விழுத்தி 1965 யூ.என்பியோடு சேர்ந்து கூட்டரசாங்கத்தைக்; கொண்டந்தவர்களின் பரம்பரை  ஜீவியப்பரியந்தம் யூ.என:பிக்கு நெருக்கடி வந்தால் சரியாகச் சொல்வதென்றால் இலங்கை முதலாளித்துவ அரசுக்கு நெருக்கடி வந்தால் உடனே கண்டு கேட்டிராத மட்டத்திற்கு ஜனநாயவாதிகளாகி விடுவர். சகல அரசியற்கைதிகளையும் விடுதலை செய்யுங்கள் என்று நாதவறிக்கூட உச்சரியாதவர்களின் ஜனநாயகப் புலடாக்குப் பின்னால் பாசிசசச் சதி அடைகாப்பதை வெகுசீக்கிரத்தில் வரலாறு நிரூபித்துக் காட்டும். பாசிசததைத் தோற்கடிக்கச் சோவியத்துகளை கட்டுங்கள்.