Mar 19

அதிநவீன ரொக்கெட் இயந்திர பரிசோதனையில் வடகொரியா

அதிநவீன சக்தி வாய்ந்த ரொக்கெட் இயந்திர பரிசோதனையை வடகொரியா நடத்தியது. தனது சொந்த முயற்சியில் விண்ணுக்கு செயற்கை கோள்களை அனுப்ப வடகொரியா திட்டமிட்டுள்ளது.

அதற்கான முயற்சியாகவே இந்த பரிசோதனை கருதப்படுகிறது. நேற்று நடந்த ரொக்கெட் என்ஜின் பரிசோதனையை 'வடகொரியாவின் ரொக்கெட் தொழிற்துறையில் புதிய உருவாக்கம்' என ஜனாதிபதி கிம் ஜாங் யங் பிரகடனம் செய்துள்ளார்.

வடகொரியா சமீபத்தில் இரண்டு அணு ஆயுத சோதனைகளையும், ஏவுகணை சோதனைகளையும் நடத்தியது. கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை நடத்தப்போவதாக வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங்-யங் அறிவித்துள்ளாதால் ஐ.நா. மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.