Jun 21

அகதிகளுக்கும் புதிய குடிவரவாளர்களுக்கும் உதவ புதிய திட்டங்களை அறிமுகப்படுத்துகிறது ஒன்ராரியோ மாகாண அரசு

அகதிகளுக்கும் புதிய குடிவரவாளர்களுக்கும் உதவும் வண்ணம் ஒன்ராரியோ மாகாண அரசு நான்கு புதிய திட்டங்களை உருவாக்கியுள்ளது.

இத்திட்டங்களை அமுலாக்க சமூக அமைப்புக்கள், குடியமர்வு முகவரகங்கள், மாநகர மற்றும் நகராட்சிகள் ஆகியவற்றிடமிருந்து செயற்றிட்ட முன்மொழிவுகளை மாகாண அரசு எதிர்பார்க்கின்றது.

·         மாநகர இணையவழி குடிவரவு தகவல் திட்டம் ( Municipal Immigration Information Online) – குடிவரவாளர்களுக்கானது

·         ஒன்ராரியோ இணைப்புப் பாலப் பயிற்சித் திட்டம் (Ontario Bridge Training Program) – திறன்சார் குடிவரவாளர்களுக்கானது

·         புதிய குடிவரவாளர்கள் குடியமர்வுத்திட்டம் (Newcomer Settlement Program) – புதிய குடிவரவாளர்களுக்கானது

·         வளர்ந்தோருக்கான மொழிப்பயிற்சிகள் ஆங்கிலம், பிரெஞ்சு (Adult Non-Credit Language Training Program) - புதிய குடிவரவாளர்கள் மற்றும் அகதிகளுக்கானது

புதிய குடிவரவாளர்கள் மற்றும் அகதிகள் ஆகியோர் தமக்கு வேண்டிய சேவைகளைப் பெறவும் எமது சமூகத்துடன் வெற்றிகரமாக ஒன்றிணைந்து வாழவும் எமது சமூகப் பங்காளர் அமைப்புகளின் பங்களிப்பு மிகவும் முக்கியமாகும்.  

இந்த நான்கு திட்டங்களுக்கான செயற்றிட்ட முன்மொழிவுகளைப் பெற்று இவற்றை அமுல்படுத்துவதன் மூலம் எமது சமூகப் பங்காளர் அமைப்புகளுடன் இணைந்து சேவைகளை வழங்கக் கூடியதாக இருக்கும் என ஒன்ராரியொ மாகாணக் குடிவரவு அமைச்சர் லாரா அல்பனீஸ் அவர்கள் கூறினார்.