Mar 19

இலங்கை மண்ணில் பங்களாதேஷ் வரலாற்று வெற்றி

இலங்கைக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் நான்கு விக்கெட்டுக்களால் வெற்றி பெற்று இன்று வரலாறு படைத்ததுள்ளது.

இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான 2ஆவது இறுதியுமான போட்டி பி.சரவணமுத்து மைதானத்தில் நடைபெற்றது. 

இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடி தனது முதலாவது இன்னிங்ஸில் டினேஷ் சந்திமலின் ஆட்டமிழக்காத 138 ஓட்ட துணையுடன் 338ஓட்டங்களைப் பெற்றது.

பின்னர் முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த பங்களாதேஷ்  தமீம் இக்பால் (49), சௌமியா சர்கர் (61), இம்ருல் கெய்ஸ் (34), சபீர் ரஹ்மான் (42)  என ஓட்டங்களைப் பெற்றதோடு 200ஆவது போட்டியில் பங்கெடுத்திருந்த சஹிப் அல் ஹசன் 116ஓட்டங்களைப் பெற்றுக்கொடுக்க அவ்வணி 467ஓட்டங்களை எடுத்து சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

129ஓட்டங்கள் பின்னிலையில் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த . 129 ரன்கள் பின்தங்கிய நிலையில் இலங்கைக்கு திமுத் கருணாரத்ன (126) டில்ருவான் பெரேரா(50), சுரங்க லக்மலும் (42) என போராடித் தோள்கொடுக்க அவ்வணியால் 319ஓட்டங்களை மட்டுமே பெறமுடிந்தது.

வெற்றிக்கு 191 ஓட்டங்களே வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய பங்களாதேஷ் கடினமான களத்தில் போராடினார்கள். சௌமியா சர்கர் (10)இம்ருல் கெய்ஸ்(00) தமீம் இக்பால் (82) சபீர் ரஹ்மான் (41) சஹிப் அல் ஹசன் (15) மொசடெக் ஹொசைன் (13) அணித்தலைவர் முஷ்பிகுர் ரஹிம் (22) ஓட்டங்களைப் பெற்றுக்கொடுக்க 57.5 ஓவரில் 191 ஓட்டங்களைப் பெற்று  அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் தொடரை 1-1 என சமநிலைப் படுத்தியதுடன், இலங்கை அணிக்கு எதிராக முதலாவது டெஸ்ட் வெற்றியையும் அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, மேற்கிந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு அடுத்து பங்கேற்ற 100ஆவது போட்டியில் வெற்றி பெற்ற சாதனையையும் அவ்வணி தனதாக்கியுள்ளது.

தமீம் இக்பால் ஆட்ட நாயகன் விருதையும், சஹிப் அல் ஹசன் தொடர் நாயகன் விருதையும் தட்டிச் சென்றனர்.