Jun 20

செல்ல பிராணிகள் விற்பனையை தடை செய்யவுள்ள வான்கூவர்

செல்ல பிராணிகள் விற்பனை நிலையங்களில் நாய்கள், பூனைகள் மற்றும் முயல்களை விற்பனை செய்வதனை தடை செய்வது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக வான்கூவர் நகர கவுன்சிலர் தெரிவித்துள்ளார்.

விற்பனை நிலையங்களில் பிராணிகள் சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவதாக தெரிவித்தே, இந்த விற்பனை தடை குறித்து ஆராயப்பட்டு வருகிறது.

செல்ல பிராணிகளை விற்பனை செய்யும் நடவடிக்கையானது, விலங்கு உரிமை ஆர்வலர்களுக்கு ஒரு பாரிய பிரச்சினையாக அமைந்துள்ளது.

இந்நிலையில், குறிப்பிட்ட சில பிராணிகளை கடைகளில் விற்பனை செய்வதனை தடை செய்வது குறித்த சட்டவரைவை உருவாக்குவது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.