Jun 20

கனேடிய தொலைத்தொடர்பு ஆணைக்குழுவிற்கு இடைக்கால தலைவர் நியமனம்

கனேடிய வானொலி, தொலைக்காட்சி மற்றும் தொலைத்தொடர்பு ஆணைக்குழுவின் இடைக்கால தலைவராக ஜுடித் லாரோக் கனேடிய அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேற்படி ஆணைக்குழுவின் தலைவராக இருந்த ஜுன்-பியர் பிளேஸின் ஐந்து ஆண்டு பதவிக்காலம் கடந்த சனிக்கிழமையுடன் நிறைவடைந்தது.

அதனடிப்படையில் எதிர்வரும் நான்கு மாதங்களுக்கான இடைக்காலத் தலைவராக ஜுடித் லாரோக் நேற்று (திங்கட்கிழமை) நியமிக்கப்பட்டார்.

ஜுடித் லாரோக், ஏற்கனவே கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 2017ஆம் ஆண்டு மே மாதம்வரை கனேடிய வானொலி, தொலைக்காட்சி மற்றும் தொலைத்தொடர்பு ஆணைக்குழுவின் துணைத் தலைவராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஆணைக்குழுவின் தலைவர் பதவிக்கான தெரிவுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.