Jun 20

நீச்சல் தடாக உயிரிழப்புகள் அதிகரிப்பு

நீச்சல் தடாகங்களில் மூழ்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அண்மைய சில நாட்களில் அதிகரித்துள்ளமை தொடர்பில் கரிசனைகள் எழுந்துள்ளன.

கியூபெக்கிலும், ஒன்ராறியோவிலும் கடந்த வாரத்தில் மட்டும் மூன்று சிறுவர்களும், இரண்டு பெரியவர்களும் இவ்வாறு நீச்சல் தடாகத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் இன்னமும் உயிராபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமையும் மொன்றியலுக்கும் கியூபெக் நகருக்கும் இடையே உள்ள ட்ரம்மவுண்ட்வில் எனப்படும் நகரில் உள்ள நீச்சல் தடாகம் ஒன்றினுள் மூழ்கிய மூன்று வயது குழந்தை ஒன்று உயிருடன் மீட்கப்பட்ட போதிலும், இன்னமும் உயிராபத்தான நிலையில் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஒட்டாவாவில் 11 வயது சிறுவர் ஒருவர் தனது வீட்டு நீச்சல் தடாகத்தில் நண்பர்களுடன் நீச்சலில் ஈடுபட்ட வேளையில் உயிரிழந்துள்ளார்.

அதேபோல 20 வயது சிறுவர் பராமரிப்பு பெண் ஒருவரும் நீச்சல் தடாத்தில் மூழ்கியிருந்த வேளையில், 4 வயது சிறுவனால் 911ற்கு முறையிடப்பட்டதனை அடுத்து மீட்கப்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் அவரும் தொடர்ந்து ஆபத்தான நிலையிலேயே சிகிச்சை பெற்று வருகின்றார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமைக காலையில் மொன்றியலில் உள்ள நீச்சல் தடாத்தில் இருந்து மீட்கப்பட்ட 8 வயது சிறுவர் ஒருவர் தொடர்ந்தும் உயிராபத்தான் நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அதே நாளான கடந்த சனிக்கிழமை இரவு ஹமில்ட்டனில் நான்கு வயது சிறுவர் ஒருவர் உயிரிழந்த நிலையில் நீச்சல் தடாகத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளார்.

வெப்பநிலை அதிரிகமாக காணப்படும் இந்த காலப்பகுதியில் நீச்சல் தடாகங்களில் மூழ்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.