Jun 20

சர்வதேச அகதிகள் தினம் இன்று! இன்றும் அகதியாக ஈழத்தமிழன்!

பன்னாட்டு அகதிகள்நாள் இன்று நினைவுகூரப்படுகின்றது அகதியாக உலகமெல்லாம் அலையும் தமிழனாக ஈழத்தமிழரின் நிலை காணப்படுகின்றது.

பன்னாட்டு அகதிகள் நாள் நினைவிற்கொள்ளப்படுவதும் ஈழத்தமிழர்கள் தான் இன்றும் சொந்த நாடில்லாமல் அகதிகளாக புலம்பெயர்ந்து வெளிநாடுகளுக்கு கடல்வளியாகவும்,விமானமூலமும் சென்று நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் அகதிகள் உரிமை கோரி வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

இந்த அகதிகள் என்ற சொற்பதம் ஆகக்கிரமிப்பாளர்களால் உருவாக்கப்படும் ஆக்கிரமிக்கப்பு காரணமாகவே தமது பூர்வீக நிலத்தில் சுதந்திரமாக வாழமுடியாமல் அகதியாக அன்னிய நாட்டிற்கு சொல்கின்றார்கள்.

இன்றும் ஈழத்தில் தாங்கள் பிறந்து வளர்ந்த மண்ணில் வாளமுடியாத நிலையில் ஈழத்தமிழர்கள் வாழ்ந்துவருகின்றார்கள்.

ஆக்க்கிரமிப்பாளர்களின் அதிகார தனத்தினாலும்,ஆக்கிரமிப்பினாலும் இன்றும் தாயகத்தில் இருந்து அகதிகளாக வெளிநாடு செல்ல எத்தனையோ தமிழர்கள் திட்மிட்டிருக்கின்றார்கள் உயிரை பணயம் வைத்து கடல்வளியாக தொடர்ச்சியா சென்றுகொண்டிருக்கின்றார்கள்.

இது சிங்கள இனவாத அரசின் ஆக்கிரமிப்பின் செயற்பாடே ஈழத்தமிழர் அகதிகளாக இடம்பெயர்கின்றார்கள் இன்றும் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஒரு இனவாத மதவாத அரசின் அராஜக போக்கால்தான் அகதியாகி உலகமெங்கும் அலைகின்றான் தமிழன்.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 20ஆம் திகதி நினைவு கூரப்பட்டு வருகின்றது.

2000ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் சிறப்புத் தீர்மானமொன்றின்படி அகதிகளுக்கான தமது ஆதரவினை வெளிப்படுத்தும் முகமாக உலக அகதிகள் தினமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

ஆபிரிக்க அகதிகள் நாள் ஜூன் 20 இல் கொண்டாடப்படுவதால் இந்நாள் உலக அகதிகள் நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.

பல்வேறு மோதல்களுக்குள் சிக்கி அகதிகளாக தாம் வசிக்கும் நாட்டினுள் பிற நாடுகளிலென இடம்பெயர்ந்து பல்வேறு துன்பங்களுக்குள்ளாகி வாழ்ந்துவரும் அகதிகள் பற்றிய விழிப்புணர்வினை உலக மக்களிடத்தில் ஏற்படுத்துவதே இந்நாளின் முக்கியமான நோக்கமாகும்.

அன்றைய நாள் உலகின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெறும் பல்வேறு போர்களால் அரசியல் சமூகச் சூழல்களால் அகதிகளாக அல்லலுறும் அகதிகளை நினைவு கூரும் வகையில் கூட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் கருத்தரங்குகள்இ இசை நிகழ்ச்சிகள் நினைவஞ்சலி நிகழ்வுகளெனப் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.

அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் ஒவ்வோர் ஆண்டும் இந்நிகழ்வுகளுக்கான கருப்பொருளைத் தீர்மானிக்கிறது.

உலகில் போர் வன்முறை வறுமை வேலை இழப்பு போன்றவற்றால் உடமைகள் உரிமைகள் உறவுகள் இருப்பிடம் என அனைத்தையும் இழந்தவர்கள் அகதிகளாக உருவெடுக்கின்றனர்.

இவ்வாறு பாதிக்கப்பட்டுஅச்சுறுத்தலில் வாழ்ந்துவரும்இ ஆண்கள் பெண்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார வசதிகளை ஏற்படுத்தும் விதமாக இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.

இவர்களுக்கு உள்ள உரிமைகளை திரும்ப அவர்களுக்கு வழங்கவேண்டும். அவர்களும் சமூகத்தில் மற்றவர்களைப் போல நடத்தப்பட வேண்டும் என்பதை இத்தினம் வலியுறுத்துகிறது.

2011ம் ஆண்டு கணக்கின் படி உலகளவில் 1 கோடியே 52 லட்சம் பேர் அகதிகளாக வாழ்கின்றனர் என யூ.என்.எச்.ஆர்.சி. ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சொந்த நாட்டிலேயே அகதிகளாக ஆக்கப்பட்டவர்கள் பலர். இவ்வாறு அகதிகளாக உள்ளவர்களுக்கு அந்தந்த நாடுகள் சிறப்பு திட்டங்கள் மூலம் மறுவாழ்வு அளிக்க வேண்டும்.

அகதிகள் சொந்த நாடுகளுக்கு திரும்புவதற்கு முயற்சி எடுக்க வேண்டும் என யூ.என்.எச்.ஆர்.சி. வலியுறுத்துகிறது.

உயிர் அச்சுறுத்தல் பொருளாதார தேடல்கள் நிமித்தம் இலங்கையிலிருந்து அகதி அந்தஸ்து கோரி வெளிநாடு செல்வோரில் இன்றுவரை மாற்றங்களில்லை.