Nov 21

ஹெரோயினுடன் யுவதி ஒருவர் கைது


மோதரை, ஹேனமுல்ல பகுதியில் ஹெரோயினுடன் யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

மோதரை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே குறித்த யுவதி கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேக நபரிடம் இருந்து 5 கிராம் 700 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

சந்தேக நபரை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

சம்பவம் தொடர்பில் மோதரை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.