Nov 21

ரஞ்சன் ராமநாயக்கவை ஈர்த்த பொது வேட்பாளர்


2014 ஆம் ஆண்டு முடிவின் போது பொது வேட்பாளராக வந்த மைத்திரிபால சிறிசேன அப்போது தெரிவித்த கருத்துக்களினால் தான் ஈர்க்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். 

நேற்று (20) தெரண தொலைக்காட்சியில் இடம்பெற்ற வாதபிட்டிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

மஹிந்த ராஜபக்ஷவின் வலது கையாகவும், கட்சியின் பொதுச் செயலாளராகவும் இருந்த மைத்திரிபால சிறிசேன தெரிவித்த கருத்துக்கள் மக்கள் நம்பக்கூடிய விதத்தில் இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். 

இருப்பினும் சிறிது காலம் கடந்த பின்னர் ஜனாதிபதி மீது சந்தேகம் எழுந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

ஒரு நாள் தன்னை அமைச்சரவை கூட்டத்திற்கு அழைத்தாகவும் அதன்போது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவி தொடர்பில் அவர் தெரிவித்த கருத்துக்களால் அவர் பேராசை அற்றவர் என்ற எண்ணம் தோன்றியதாகவும் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். 

நாம் அனைவரும் உண்மைக்கு பின்னால் செல்ல வேண்டுமே தவிர வேறு யார் பின்னாலும் இல்லை என தெரிவித்த அவர், ஜனாதிபதி மைத்திரிபால மீண்டும் பொது வேட்பாளராக போட்டியிட ஐக்கிய தேசிய கட்சியிடம் கேட்ட போது அதனை தங்களது கட்சி மறுத்தாகவும் இதனால் மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்