Nov 20

அரச ஊழியர்களின் கொடுப்பனவுகளை ஐ.தே.க நிறுத்த முயல்கின்றது: ஆளும் தரப்பு குற்றச்சாட்டு

அரசாங்க ஊழியர்களின் சம்பளங்கள் மற்றும் கொடுப்பனவுகளை நிறுத்தும் செயற்பாட்டில் ஐக்கிய தேசிய கட்சி ஈடுபட்டு வருவதாக ஆளும் தரப்பினர் தெரிவித்துள்ளனர்

.

நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில்  நடைபெற்ற ஊடகச் சந்திப்பிலேயே ஆளும் தரப்பினரைச் சேர்ந்த அமைச்சர்களான தினேஸ் குணவர்த்தன, விமல் வீரவன்ச மற்றும் பந்துல குணவர்த்தன ஆகியோர் இத்தகைய கருத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

மேலும் எதிர் கட்சியினர் பிரேரணை ஒன்றின் ஊடாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது  செயலாளரினது செலவீனங்களை இடைநிறுத்த தீர்மானித்துள்ளனர். அவ்வாறு அவர்கள் செய்தால் அரச ஊழியர்களுக்கு எவ்வாறு சம்பளத்தை பெற்றுக்கொடுக்க முடியுமென ஆளும் தரப்பினர் கேள்வி எழுப்பியுள்ளனர்

ஆகையால், எதிர் கட்சியினரின் செயற்பாட்டுக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டமொன்றை நடத்த வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதேவேளை பிரதமரை நீக்கும் அதிகாரம் சபாநாயகருக்கோ, நாடாளுமன்றத்துக்கோ அதிகாரம் கிடையாது. இதனை  கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தௌிவுபடுத்தியுள்ளோம் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.