Jun 20

மார்க்கம் மாநகரில் “யாழ் சீடவூட் பார்க்” திறப்பு விழாவில் மக்கள் கூடி மகிழ்ந்தனர்!

மார்க்கம் மாநகரில் எல்சன் வீதியிலுள்ள “சீடவூட் பப்ளிக் ஸ்கூலுக்கு” அண்மையில் புதிதாகஅமைக்கப்பட்டுள்ள “யாழ் சீடவூட் பூங்கா” வினை மார்க்கம் மாநகர சபை உறுப்பினர் திரு. லோகன் கணபதிஅவர்கள் கடந்த ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் கோலாகலமாக திறந்து வைத் தார். இவ்வைபவத்திற்கு வருகைதந்திருந்த தமிழ் பெற்றோர்களும்சிறுவர்களும்; கரகோஷம் செய்து தமது மகிழ்ச்சியினை தெரிவித்துக்கொண்டனர்.

மார்க்கம் மாநகர சபையின் பிரதம நிர்வாகஅதிகாரியான திரு.அன்டி ரெயிலர் மற்றும் லண்டனில் இருந்து கனடாவுக்கு வந்திருந்த திரு.லோகன்கணபதியின் உற்ற நண்பரும் அவரது சொந்த ஊரான நெடுந்தீவை சேர்ந்தவருமான ஓய்வு பெற்ற டாக்டர்சந்திரபாலும் பிரதம விருந்தினர்களா கக் கலந்து கொண்டு சிறப்பித்தனர். திரு.லோகன் கணபதி அங்குஉரையாற்றிய போது “மார்க் கம் மாநகரில் வாழும் மக்கள் மகிழ்ச்சியுடனும்தேகாரோக்கியத்துடனும் வாழவேண்டும் என்பத னை கருத்திற் கொண்டு நாம் மாநகர சபையின் ஊடாக விளையாட்டு மைதானங்களையும் பூங்காக்களையும் அமைத்து வருகின்றோம்.

இந்த விளையாட்டு மைதானத்துக்கு அருகே அதோ உள்ள கிரிக்கெட் விளையாட்டுமைதானத்தை நாம் ஐந்தாண்டுகளுக்கு முன்னர் திறந்து வைத் தோம். இப்பகுதியில் தமிழ் மக்கள் அதிகளவில் வாழ்ந்து வருவதனால் அவற்றுக்கு நாம் தமிழ் பெயர்களையே சூட்டி வருகின்றோம். மிட்லன்ட் வீதி14வது அவெனியூவீதி சந்தியில் அமைக்க ப்பட்டுள்ள பொழுது போக்கு நிலையமும் வெகு விரைவில் திறக்கப்பட உள்ளது.

மக்களாகிய உங்களால் தெரிவு செய்யப்பட்ட மாநகர சபை உறுப்பினர்களாகிய நாம் உங்களுக்கான வசதி களை செய்துகொடுப்பது எமது கடமை. இவ்வைபவத்தில் கலந்து கொண்டு சிறப்பித்த உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்” எனக்கூறினார். திறப்பு விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும்“பிற்சா”“ஹம்பேக்கர்” “கொட் டோக்”இ “ஐஸ் கிறீம்” குடி நீர் ஆகியன இலவசமாக வழங்கப்பட்டன.