Nov 19

தமிழில் இருந்து உருவாகிறதா ஒரு புதிய மொழி??

தமிழில் இருந்து தான் எல்லா மொழிகளும் தோன்றியது என்று நாம் வரலாறுகளில் படித்துள்ளோம். ஆனால் நாம் வாழும் இந்த சமகாலத்திலும் எமது தமிழ் மொழியில் இருந்து ஒரு புது மொழி உருவாகிறது என்பது எம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?

உச்சமுனை புத்தளம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. புத்தளம்- கல்பிட்டியில் உள்ள 14. சிறிய தீவுகளில் ஒன்றுதான் இந்த உச்சமுனை. இத்தீவிற்கு புத்தளம் களப்பினூடாக 1 மணித்தியாலம் படகில் செல்லவேண்டும் உச்சமுனை ஒரு தீபகற்பமாகும். இத்தீவில் சுமார் 300 குடும்பங்கள் வாழ்கி றார்கள். இவர்களது பிரதான தொழில் மீன்பிடித்தல்.

அங்கிருந்து 10 கி.மீ.தூரத்திலுள்ள 'கீரி முண்டல' பகுதியில் இருந்து தான் இவர்கள் மூதாதையர் அங்கு போனதாக அங்கு வாழும் 63 வயதா ன 'செபஸ்டியன் ரொபர்ட்' கூறினார். அவர் மேலும் குறிப்பிடும்போது "கீரிமுண்டல கடல் நீர் படிப்படியாக குறைந்து கொண்டே போனது. ஆரம் பத்தில் 6 அல்லது 7 குடும்பங்களே வந்ததாகவும், அவருக்கு அப்போது வயது 12 எனவும் குறிப்பிட்டிருந்தார்.

அங்கு இப்போது 300 குடும்பங்கள் உண்டு. இதில் எத்தனை பேர்கள் தமிழர் என்று கேட்டதற்கு நாம் தமிழில்தான் அனைவரும் பேசுகிறோம் என்றாலும் நாங்கள் சிங்களவர்களே என்று கூறியுள்ளார். நாங்கள் பேசிக் கொண்டாலும் சிங்களவர்கள். எங்களில் சிலருக்கு பிறப்பு அத்தாட்சி பத் திரம் மட்டுமல்ல, அடையாள அட்டையுமில்லை. அதனால் வாக்குரி மையுமில்லை. என்றாலும் எங்களுக்குள் முரண்பாடு இல்லாது சந்தோ சமாக வாழ்கிறோம்.

அதிசயம் என்னவெனில் இவர்கள் தமிழ் கலாச்சாரத்தோடு வாழ்வது தான். இவர்களுக்கு சிங்களத்தில் உரையாட முடியவில்லை. தமிழில் நன்றாக பேசுகிறார்கள்.

25 கிலோ மீற்றர் பரப்பைக் கொண்ட இங்கு, அங்குள்ள சிறுவர்களுக்கு கல்விக்காக உச்சிமுனை ரோமன் கத்தோலிக்க பாடசாலை ஒன்று மட் டுமே உள்ளது. இதில் 5ம் வகுப்புவரையிலே கற்பிக்கப்படுகிறது. இதில் வசதி படைத்தவர்களது பி்ள்ளைகள் மட்டுமே கற்பிற்கப்படுகிறார்க ள். ஏனை யோர் தமது குலத் தொழிலான மீன்பிடிக்க போய்விடுகிறார் கள்.இந்த ஆரம்ப பாடசாலையின் ஆசிரியை ரொபர்ட் அவரகளின் மகள் 'ரொசாந்தினி' ஆகும்.இவர் முறையான கற்பித்தல் பயிற்சி பெற்றிருக்க வில்ல. ஆர்வத்தோடு பிள்ளைகள் வந்தாலும், அவர்களுக்கு தளபாட வசதிகளோ, உபகரணங்களோ அங்கு இல்லை.


புகைபடங்களில்
1) திரு. செபஸ்டியான் அவர்களது மர வீடு
2) உச்சமுனை ஆரம்ப பாடசாலை
3) சிங்கள சாயல் கொண்ட அவர்களது தமிழ் எழுத்துகள்

அம்மா
கோவில்
யக்கலை
திரிபோஷா
தொப்பி
தக்காளி போன்ற சொற்களே கீழ் உள்ள படங்களில் உள்ளது.